தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் 171 உதவி, இளநிலை ஆய்வாளர் பணிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2015

தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் 171 உதவி, இளநிலை ஆய்வாளர் பணிகள்


தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் காலியாகவுள்ள 171 உதவி ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பட்டு வளர்ச்சித் துறை

மொத்த பணியிடங்கள்: 171

1. உதவி ஆய்வாளர் - 14

தகுதி: வேதியியல், தாவரவியல், விலங்கியல் துறையில்இளங்கலை பட்டம் பெற்று, சம்மந்தப்பட்ட பிரிவில் 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. இளநிலை ஆய்வாளர் - 157

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.இந்தப் பணிகளுக்கு மூன்று வகையான தேர்வுகள் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு ஆகிய தேர்வுகளின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 32-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: உதவி ஆய்வாளர் பணிகளுக்கு மாதம் ரூ.9,300 - 34,800 என்ற விகிதத்திலும், இளங்கலை உதவியாளர் பணிகளுக்கு மாதம் ரூ.5,200 - 20,200 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: பட்டு வளர்ச்சித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnsericulture.gov.in என்ற இணையதளத்தில்கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2015

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnsericulture.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி