தமிழக அரசின் அரசாணையின்படி குரூப்-1 தேர்வு எழுத கூடுதல்நேரம் கேட்டு மாற்றுத்திறனாளி வாலிபர் வழக்கு டி.என்.பி.எஸ்.சி.க்கு ஐகோர்ட்டு நோட்டீசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2015

தமிழக அரசின் அரசாணையின்படி குரூப்-1 தேர்வு எழுத கூடுதல்நேரம் கேட்டு மாற்றுத்திறனாளி வாலிபர் வழக்கு டி.என்.பி.எஸ்.சி.க்கு ஐகோர்ட்டு நோட்டீசு

குரூப்-1 தேர்வு எழுத கூடுதல் நேரம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிதொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி. செயலருக்கு, சென்னைஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டுள்ளது. சென்னை, திருமங்கலத்தை சேர்ந்தவர் ஆர்.ரமேஷ். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தேர்வு

நான் எம்.எஸ்சி. பட்டம் பெற்றுள்ளேன். மாற்றுத்திறனாளியான நான், அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவன். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2013-ம் ஆண்டு நடத்திய குரூப்-1 முதல் நிலை தேர்வில், வெற்றிப்பெற்றேன். இதையடுத்து வருகிற ஜூன் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை குரூப்-1, மெயின் தேர்வு நடக்க உள்ளது. இதில், தலா 3 மணி நேரம் வீதம் 6 பாடங்களுக்கு (தாள்களுக்கு) தேர்வு நடத்தப்பட உள்ளது. நான் மாற்றுத்திறனாளி என்பதால், ஒரு தேர்வை 3 மணி நேரத்துக்குள் எழுதி முடிக்கமுடியாது. தமிழக சமூகநலத்துறை கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர்29-ந் தேதி ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது.
கூடுதல் நேரம்
அந்த அரசாணையில், தேர்வு நேரத்தில், ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் 50 சதவீத நேரம் கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது. இதையடுத்து, இந்த அரசாணையின்படி, மெயின் தேர்வில் கூடுதலாக நேரம் வழங்கும்படி டி.என்.பி.எஸ்.சி. செயலருக்கு கடந்த ஏப்ரல் 10-ந் தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே, ஜூன் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெறும் தேர்வுகளில் எனக்கு கூடுதல் நேரம் வழங்கும்படி டி.என்.பி.எஸ்.சி. செயலருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
நோட்டீசு
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.முருகேசன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு வருகிற ஜூன் 2-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி டி.என்.பி.எஸ்.சி. செயலருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி