ஜூன் 1-ந் தேதி தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறப்பு: தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள் என்ன? கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2015

ஜூன் 1-ந் தேதி தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறப்பு: தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள் என்ன? கல்வித்துறை உத்தரவு


ஜூன் 1-ந் தேதி தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள் என்னென்ன? என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்க, நடுநிலைப்பள்ளிகள்தமிழக தொடக்க கல்வி இயக்குனரகம், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-ஜூன் 1-ந் தேதி அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளை அன்புடன் வரவேற்று, அவர்களுக்கு நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும்.அரசு வழங்கும் நலத்திட்டங்களான இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை பள்ளி திறக்கும் முதல்நாளே மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் பெற்றுத்தருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கழிவறை வசதி

பள்ளிகளில் கழிவறைகள் தூய்மையாக உள்ளதா? தண்ணீர் வசதி உள்ளதா? என்பதை பள்ளி திறப்பதற்கு முன்பே உறுதி செய்து கொள்ள வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பான சுத்தமான பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள் இருந்தால் மூடிவிட வேண்டும். மின் இணைப்புகள் சரியாக உள்ளதா? என்று தகுதி வாய்ந்த நபர்களை கொண்டு சோதனை செய்து கொள்ள வேண்டும்.மின் கசிவு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அதை சரிசெய்து கொள்ள வேண்டும். பாழடைந்த கட்டிடங்கள் இருந்தால் இடித்து தரைமட்டமாக்கிவிட வேண்டும். புதர்கள் இருந்தால், வெட்டி அப்புறப்படுத்திவிட வேண்டும். பள்ளி அமைந்துள்ள பகுதிகளில், பள்ளி செல்லா குழந்தைகள் இருந்தால் அவர்களை கண்டறிந்து, பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆங்கில வழிக்கல்வி

ஆங்கில வழிக்கல்வி தொடங்கும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் காலையில் வழிபாடு நடத்துதல், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் பேசுதல், பொன்மொழிகளை கூறுதல், படைப்பாற்றல் திறனை வளர்த்தல், மனக்கணக்கு கூறுதல் போன்ற தகுதிகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.பள்ளி திறப்பதற்கு முன்பே தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று இவையனைத்தையும் கண்காணித்து சரிசெய்ய வேண்டும். இது தொடர்பான விவரங்களை தொடக்க மற்றும் உதவி தொடக்க கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி