பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள்.மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுத்துறை இணையதளத்தில் இந்த மாத இறுதியில் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது. தேர்வு முடிவை பார்த்துவிட்டு மதிப்பெண் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் மதிப்பெண் வரவில்லை என்று மாணவ-மாணவிகள் நினைத்தால், அவர்கள் பிளஸ்-2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள்தான், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மறு கூட்டல் மற்றும் நகல் பெற மாணவ-மாணவிகள் படித்த பள்ளிக்கூடங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி அவர்கள் பள்ளிக்கூடங்களில் விண்ணப்பித்தனர். விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். விடைத்தாள் நகல் கேட்டு மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மறு கூட்டல் கோரி 1,880 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
இந்த மாத இறுதியில் கிடைக்கும்
பிளஸ்-2 விடைத்தாள் நகல்களை மாணவ-மாணவிகள் பெறுவது எப்போது என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜனிடம் கேட்டதற்கு, ‘பிளஸ்-2 விடைத்தாள் நகல் இந்த மாத இறுதிக்குள் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் ஏற்றப்பட்டு விடும். மே 31-ந்தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அது குறித்தஅறிவிப்பை பின்னர் வெளியிடுவோம்’ என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி