பிளஸ் 2: 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2015

பிளஸ் 2: 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்


பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டம் 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ஆவது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், அரசுப் பள்ளிகள் தான் காரணம் என்பது தெரியவந்தது.

குறிப்பாக வணிகவியல் பாடத்தில் 92.92 சதவீதம், பொருளியல் பாடத்தில் 97.71, வரலாறு பாடத்தில் 94 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மூன்று பாடங்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்திருப்பது தெரியவந்ததுஇதையடுத்து, தேர்ச்சி சதவீதம் குறைந்த அதாவது 80-க்கும் குறைவான தேர்ச்சி சதவீதம் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தெரிவித்ததாவது:வணிகவியல், பொருளியல், வரலாறு ஆகிய 3 பாடங்களில் தான் அதிகளவில் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

இதனால் மாநில அளவில் முதலிடம் பெறும் வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தோல்வி அடைந்துள்ள மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படும். 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ள அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார்.

5 comments:

 1. ஆசிரியர்கள் தேர்வு எழுதமுடியாது.மாணவர்களிடம் விளக்கம் கேட்கலாம்.வேண்டுமென்றே படிக்காமல் உள்ள மாணவர்களை என்ன செய்ய முடியும்.ஆசிரியர்களிடம்தான் மாணவர்களை கண்டிக்கும் அதிகாரம் இல்லையே

  ReplyDelete
 2. ஆசிரியர்கள் தேர்வு எழுதமுடியாது.மாணவர்களிடம் விளக்கம் கேட்கலாம்.வேண்டுமென்றே படிக்காமல் உள்ள மாணவர்களை என்ன செய்ய முடியும்.ஆசிரியர்களிடம்தான் மாணவர்களை கண்டிக்கும் அதிகாரம் இல்லையே

  ReplyDelete
 3. Ethellam education dept mentla sagajam pa

  ReplyDelete
 4. It's true that many many failures in all over Tamilnadu in Economics, Commerce and Accountancy... But y the question setters make the questions harder... These are all not cut off subjects... Then y they doing so??? Only gov't school students got affected by this... Especially in Economics 60 marks (3*20 marks) very tough... They've to consider this at first.

  ReplyDelete
 5. If these subjects are not considered for cut off marks no need to study know?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி