குரூப் 2 மெயின் தேர்வு கேள்விமுறையை மாற்றக்கூடாது: டி.என்.பி.எஸ்.சிக்கு கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2015

குரூப் 2 மெயின் தேர்வு கேள்விமுறையை மாற்றக்கூடாது: டி.என்.பி.எஸ்.சிக்கு கோரிக்கை


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப்2 மெயின்தேர்வில் கேள்விமுறையை மாற்றம் செய்துள்ளதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்2 பிரிவில் காலியாக உள்ள வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்புஅலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1,241 பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு உள்ள தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். முதல்நிலைதேர்வு ஜூலை 26ல் நடைபெற உள்ளது. இதில் பணிநியமனம் பெற முதல்நிலைதேர்வு, முதன்மை (மெயின்)தேர்வு, நேர்முகதேர்வு என மூன்று நிலைகளில் தேர்ச்சிபெற வேண்டும். மெயின்தேர்வு முறையில் மட்டும் டி.என்.பி.எஸ்.சி., சில மாற்றங்களை செய்துள்ளது.அதாவது கடந்தமுறை 125 கொள்குறிவினாக்களுக்கு 250 மதிப்பெண்கள், விரிவான 2 வினாக்களுக்கு 50மதிப்பெண்கள் என கேட்கப்பட்டதை மாற்றி, தற்போது 300 மதிப்பெண்களுக்கு விரிவான விடை எழுத வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ஓர் அளவிற்கு பயிற்சி பெற்று தேர்வு எழுதி முதல்நிலை தேர்ச்சிபெறும் மாணவர்கள் மெயின்தேர்வில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, இம்முறைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பழைய முறையையேபின்பற்றும்படி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி கூறுகையில், "டி.என்.பி.எஸ்.சி., குரூப்2 மெயின்தேர்வில் மாற்றம் செய்துள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பழைய முறையையே பின்பற்ற வேண்டும்,” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி