'பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், இயற்பியலில் கடந்த ஆண்டை விட, 95 சதவீதம் குறைவானோர், 'சென்டம்' எடுத்தனர்.வேதியியல், விலங்கியல், உயிரியல், கணினி அறிவியல், வணிகவியல், கணித பதிவியல் பாடங்களிலும், 'சென்டம்' எடுத்தோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.
இந்நிலையில், ஏராளமான மாணவர்கள் மறு கூட்டல், விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.
தேர்வுத் துறை வெளியிட்டுள்ள நிபந்தனைகள்:
*மறு கூட்டல் செய்யக்கோரும் தேர்வரின் விடைத்தாளில், பக்க வாரியாகவும், வினாவாரியாகவும் வழங்கப்பட்ட மதிப்பெண் மறுகூட்டல் செய்யப்படும்.
*மதிப்பீடு செய்யாமல் விடுபட்ட விடைகள் மற்றும் முழு மதிப்பீடு செய்யாத விடைகளை பரிசீலித்து மதிப்பெண் வழங்கப்படும்.
*விடைக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பெண்ணை விட கூடுதலாக வழங்க முடியாது.
*மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில் மாற்றம் இருந்தால், புதிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
*மறு கூட்டலுக்கு மட்டும் விண்ணப்பிப்பவருக்கு நகல் வழங்கப்படாது.
*விடைத்தாள் நகல் பெற்றவர்களுக்கு மட்டுமே மறு மதிப்பீடு செய்யப்படும்.
*தேர்வர்களின் விடைத்தாள்களில், சம்பந்தப்பட்ட பாடத்திற்கான பாட வல்லுனர் மூவர் குழு மூலம் மறு மதிப்பீடு செய்யப்படும்.
*மறு மதிப்பீட்டில் மதிப்பெண் உயர்வோ, குறைவோ ஏற்படலாம். குறைந்தால், முந்தைய அதிக மதிப்பெண் கிடைக்காது; மறு மதிப்பீடு மதிப்பெண்ணே இறுதியானது.
எனவே, பாட வல்லுனர்களிடம் நன்றாக ஆய்வு செய்து, மதிப்பெண் உயரும் என்று தெளிவாகத் தெரிந்து, மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி