3 மணி நேரம் தாமதத்துக்குப் பின் வெளியானது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2015

3 மணி நேரம் தாமதத்துக்குப் பின் வெளியானது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.முன்னதாக காலை 11 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதியம் 2.15 மணியளவிலேயே தேர்வு முடிவுகள் வெளியாகின.சுமார் 3 மணி நேரம் தாமதமாக முடிவு வெளியானதால் மாணவர்கள், பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகினர்
.மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி நிறைவடைந்தது.தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 25-ம் தேதி வெளியான நிலையில், 10-ம் வகுப்பு தேர்வுமுடிவுகள் 27-ம் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ முதலில்அறிவித்திருந்தது. பின்னர் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 28-ம் தேதி (இன்று) வெளியிடப்பட்டது.தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி