4339 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2015

4339 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு.


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 10

மொத்த காலியிடங்கள்: 4339

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

அதிகாரிகள் மற்றும் ஆசிரியரல்லாத பணிகள்: 585
1. துணை முதல்வர் - 30
2. நிதி அலுவலர் - 01
3. உதவியாளர் - 75
4. கிளார்க் (UDC)- 153
5. லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) - 312
6. இந்தி மொழிபெயர்ப்பாளர் - 05
7. சுருக்கெழுத்தர் கிரோடு-II - 08
8. உதவி ஆசிரியர் - 01

ஆசிரியர் பணி மற்றும் காலியிடங்கள்: 3754

I . முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) (குரூப் பி பணி) - 387
1. ஆங்கிலம் - 45
2. இந்தி - 20
3. இயற்பியல் - 38
4. வேதியியல் - 30
5. பொருளாதாரம் - 32
6. வணிகவியல் - 68
7. கணிதம் - 28
8. உயிரியல் - 36
9. வரலாறு - 30
10. புவியியல் - 21
11. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 39

II. பயிற்சி பட்டதாரி ஆசிரியர்கள் (TGT) (குரூப் பி பணி) - 654
1. ஆங்கிலம் - 72
2. இந்தி - 67
3. சமூக கற்கைகள் - 59
4. அறிவியல் - 61
5. சமஸ்கிருதம் - 62
6. கணிதம் - 70
7. P&HE - 117
8. AE - 60
9. WE - 86

III. இதர கற்பித்தல் பணியிலிருந்து (குரூப் பி பணி) - 74
1. நூலகர் - 74

IV. முதன்மை ஆசிரியர் மற்றும் மாற்ற அழைப்பு விடுத்தது (இசை) (குரூப் பி பணி)- 2639

1. ஆரம்ப பள்ளி ஆசிரியர் - 2566
2. PRT (இசை) - 73

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செயல்திறன் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

1. துணை முதல்வர் மற்றும் நிதி அலுவலர் பணிக்கு ரூ.1,200

2. மற்ற அனைத்து பணிகளுக்கு ரூ.750

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் கேந்திரிய வித்யாலயாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.06.2015

மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://kvsangathan.nic.in/EmploymentDocuments/EMP-NTC-18-05-15.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.

10 comments:

  1. Very good. Hindi theriyathe?Hindi first padipom apram exam ku apply panikalam

    ReplyDelete
  2. Hindi padiyungal... T Tamil naatil mattum Hindi illai.... Political party muzhu poruppu .....kutti suvaraakitaanga....

    ReplyDelete
  3. Tet certificate ennum kedaikathavanga yaravathu erukeengala

    ReplyDelete
  4. Ssa data entry operators adv ovaru district kum call for panirukanga.sivagangai district notification vanthurucha. Anybody plz reply

    ReplyDelete
  5. Aadhi kalathe engalai adaki oduki vaitheer !
    Intha Naveena yugathiluma engalai nasuka vendum !
    Pothum samoogame engalai puram thalathe !!!
    Engalukana vidiyalai kodu*******
    **Adhi thiravidan**

    ReplyDelete
  6. வணக்கம் ஆசிரிய சகாக்களே..! ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்குரிய ஆசிரியர் தேர்வு பட்டியலை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.. இல்லையேல் விரைந்து போராட தயாராக இருப்போம் சகாக்களே..! சட்டசபை கூட்டம் தொடங்கும் வரை பொறுமையுடன் இருப்போம் பிறகு நமது போரட்ட குணத்தை வெளிக்காட்டுவோம்..! எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள் ஆசிரிய சகாக்களே..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
    Replies
    1. Andrum urimaiyai pera poradinargal Nam munnorgal!
      Indrum petra urimaiyai thirumba pera porada vendiullathu!

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி