ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு அரசு ரூ.97 கோடி ஒதுக்கீடு - இந்த ஆண்டும் 25 சதவீத இடங்களை வழங்க சம்மதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2015

ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு அரசு ரூ.97 கோடி ஒதுக்கீடு - இந்த ஆண்டும் 25 சதவீத இடங்களை வழங்க சம்மதம்


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கான 2 ஆண்டு கல்விக் கட்டண தொகை யாக ரூ.97 கோடியை ஒதுக்கிஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கல்விக் கட்டண செலவை அரசு வழங்கும். தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 2013-14 கல்வி ஆண்டில் 49 ஆயிரத்து 864 மாணவ, மாணவிகளும், 2014-15 கல்வி ஆண்டில் 86 ஆயிரத்து 729 பேரும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.அந்த வகையில் 2013-14ம் ஆண்டுக்கு ரூ.25.16 கோடியும், 2014-15 ஆண்டுக்கு ரூ.71.91 கோடியும் என மொத்தம் ரூ.97 கோடியை தரவேண்டும் என்று தமிழக அரசிடம் தனியார் பள்ளிகள் அறிக்கை சமர்ப்பித்திருந்தன. ஆனால், மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதி வராததால்இத்தொகை நிலுவையில் இருந்து வந்தது. நிலுவைத் தொகையைத் தராவிட்டால் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்று தனியார் பள்ளிகள் அறிவித்தன.இதற்கிடையே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டுக்காக தனியார் பள்ளிகளுக்கு தரவேண்டிய ரூ.97 கோடியை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார்.மத்திய அரசிடமிருந்து நிதி கிடைத்துவிட்டதால் தனியார் பள்ளிகளுக்கு கல்விச் செலவின நிதியை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது.தனியார் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு தரவேண்டிய ரூ.97 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் டி.சபீதா உத்தரவு பிறப்பித்துள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்தார். இந்த நிதி அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ) மூலமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளி கள் சங்கப் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.நந்தகுமார் கூறும்போது, ‘‘தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிதி தொடர்ந்து 2 ஆண்டுகளாக வழங்கப்படாத தால் இந்த ஆண்டு 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க மாட்டோம் என்று அறிவித்திருந்தோம். தற்போது 2 ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் ரூ.97 கோடியை ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த ஆண்டும் 25 சதவீதஒதுக்கீட்டில் ஏழை மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி