ஆய்வக உதவியாளர்பணிக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பம் கடைசி நாளில் கூட்டம் அலைமோதியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2015

ஆய்வக உதவியாளர்பணிக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பம் கடைசி நாளில் கூட்டம் அலைமோதியது

ஆய்வக உதவியாளர் பணிக்கு 4 ஆயிரத்து 362 பேர் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். இந்த பணிக்கு தமிழ்நாடு முழுவதும் 9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆய்வக உதவியாளர்

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வகங்களில் புதிதாக ஆய்வக உதவியாளர்கள் 4 ஆயிரத்து 362 பேர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆய்வக உதவியாளர்களை தேர்ந்து எடுப்பதற்காக அரசு தேர்வுகள் இயக்குனரகம் எழுத்து தேர்வு நடத்த இருக்கிறது.தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஒரே எழுத்துத்தேர்வை நடத்த உள்ளது. அந்த தேர்வின் வினாக்கள் 10-வது வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும். அதாவது கொள்குறி வினாக்கள் கொண்ட விடைத்தாள் தயார் செய்து ஓஎம்ஆர் ஷீட் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் வகையில் போட்டித்தேர்வு நடத்தப்படும்.தேர்வு நடத்தி மதிப்பெண்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தி 1:5 என்ற விகிதத்தில் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

பின்னர் மாவட்ட அளவில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் வழங்கப்படவேண்டிய மொத்த மதிப்பெண்கள் 25.

9 லட்சம் பேர்

தமிழ்நாடு முழுவதும் அந்தந்தமாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்த மையங்களில் ஆய்வக உதவியாளர் பணிக்கு தினமும் ஏராளமானவர்கள் விண்ணப்பித்தனர்.நேற்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க ஏராளமானவர்கள் கூடினார்கள். உதாரணமாக சென்னை வேப்பேரியில் உள்ள பென்டிங்க் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலையிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்க வந்தனர். விண்ணப்பதாரர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணியும் அங்கேயே நடந்தது. நேற்று மாலையில் கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக புகைப்படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து நேற்று விண்ணப்பித்தவர்களுக்கு இன்று(வியாழக்கிழமை) புகைப்படம் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் 9 லட்சம்பேர்வரை விண்ணப்பித்துள்ளனர் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி