'ஆன்-லைன்' கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு:மாவட்ட அளவில் வெளிப்படையாக நடத்த கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2015

'ஆன்-லைன்' கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு:மாவட்ட அளவில் வெளிப்படையாக நடத்த கோரிக்கை

ஆன்-லைன்' முறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டுதோறும், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.
மறைத்ததாக புகார்:
கடந்த ஆண்டு,
மாநில அளவில், ஒரே நேரத்தில், ஆன்-லைன் மூலம் நடத்திய கலந்தாய்வில், பல இடங்கள் மறைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.நடப்பாண்டில், வரும், ஜூன் மாதம், கலந்தாய்வு நடக்கும் என, கூறப்படுகிறது. வழக்கம்போல், ஆன்-லைன் முறையில், கலந்தாய்வை நடத்தாமல், மாவட்ட வாரியாக, வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும் என, ஆசிரியர் கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலர் கோவிந்தன் கூறியதாவது:இருக்கும்; ஆனா, இருக்காதுகலந்தாய்வில் பங்கேற்பதற்கு முன்பே, அருகில் எந்தந்த காலியிடங்கள் உள்ளன என, ஆசிரியர்கள் தெரிந்து கொள்கின்றனர். அந்த இடங்களை எதிர்பார்த்து சென்றால், அவை, கலந்தாய்வில் காட்டப்படுவதில்லை.ஒருவர், இரண்டு நிமிடத்தில், இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதால், நிதானமாக,அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்ய முடியாமல், துாரமாக உள்ள பள்ளிகளுக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் என்ற முறையில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம், இந்த குறையை கூறினால், 'எங்களுக்கு தெரியாது; இயக்குனரகத்துக்கு, காலிப்பணியிட பட்டியலை அனுப்பிவிட்டோம்' என கைவிரித்து விடுகின்றனர்.
நடவடிக்கை தேவை:
இயக்குனரகத்தில் கேட்டால், 'மாவட்டங்களில் இருந்து வந்த பட்டியலின் அடிப்படையிலேயே, கலந்தாய்வு நடக்கிறது' என, திருப்பி அனுப்புகின்றனர்.'ஆன்-லைன்' வேண்டாம்இதனால், ஆன்-லைன் கலந்தாய்வை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையாக கலந்தாய்வை நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட அளவிலான கலந்தாய்வில், தவறு நடந்தாலும், தட்டிகேட்க, வழி உண்டு. ஆன்-லைன் கலந்தாய்வில், எதையும் கேட்க வழியில்லை.இவ்வாறு, அவர்தெரிவித்தார்.

5 comments:

  1. DeploymentKu Counciling. Nadathi piragu matravargaluku counciling nadathavum.... Deployment Irukka koodaathu...

    ReplyDelete
  2. Surplusa irukra postku counseling vachu mathuvangala ila avangalavae vacanta irukra oru place ku mathiduvangala?

    ReplyDelete
  3. வணக்கம்ஃ கல்விச்செய்தி வாசகர்களே நான் சேலம் மாவட்டம் செந்தராப்பட்டி அரசு மகளி்ர் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். ஆனால் நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள பகுதிக்கு மாற்றம் செய்து கொள்ள விரும்புகிறேன் எனவே கடலூர் மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டத்திவற்கு மிச்சுவல் டிரன்ஸ்பர் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர் தொடர்பு கொள்ளவும் 9786702848

    ReplyDelete
  4. SURPLUS COUNCILING EPPA SIR NATAKKUM

    ReplyDelete
  5. SURPLUS COUNCILING EPPA SIR NATAKKUM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி