ஓரே ரேங்க், ஒரே ஓய்வூதிய திட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு: பிரதமர் மோடி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2015

ஓரே ரேங்க், ஒரே ஓய்வூதிய திட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு: பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரே பதவி–ஒரே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்1971–ம் ஆண்டு முதல் தொடட்ஙகிய இந்த போராட்டம் 43 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக தனது தேர்தல் பிரசார அறிக்கையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி–ஒரே ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என அறிவித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சிலதினங்களுக்கு முன்பு மதுராவில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி இதனை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அவ்வாறு அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
இந்நிலையில் ராணுவத்தின் உயரிய விருதான வீரசக்ரா விருது பெற்ற மூத்த முன்னாள் ராணுவ வீரரான விங்கமாண்டர் எஸ்.டி. கார்னிக் மற்றும் வாயு சேனா விருது பெற்ற விங் கமாண்டர் படோபேகர் ஆகியோர் மராட்டிய அரசு சார்பில் நடத்தப்பட இருந்த பாராட்டு விழாவை புறக்கணித்தனர். இந்த விழாவில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டு 2 முன்னாள் ராணுவ வீரர்களையும் கவுரவப்படுத்துவார் என்றுஅறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், ஓரே ரேங்க், ஒரே ஓய்வூதியம் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் ஆனால் எப்போது என்பதை உறுதிகூறமுடியாது என்றார்.இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஓரே ரேங்க், ஒரே ஓய்வூதியம் திட்டம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம்என்று , இன்று காலை டுவிட்டரில் பிரதமர் நரேந்திரமோடி உறுதி தெரிவித்துள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி