தானே மாநகராட்சி நடவடிக்கை முதலாம், இரண்டாம் வகுப்பு குழந்தைகள் புத்தகப்பை கொண்டு செல்ல வேண்டியதில்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2015

தானே மாநகராட்சி நடவடிக்கை முதலாம், இரண்டாம் வகுப்பு குழந்தைகள் புத்தகப்பை கொண்டு செல்ல வேண்டியதில்லை


தானே: பள்ளி குழந்தைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையை குறைப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வரும் நிலையில் வரும் கல்வியாண்டில் இருந்து முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் புத்தகப் பையை அன்றாடம் சுமந்து வர வேண்டியதில்லை என்று தானே மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாணவர்கள் தங்கள் புத்தகம் மற்றும் பிற பொருட்களை பள்ளிக் கூடத்திலேயே விட்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளை தானே மாநகராட்சி செய்து வருகிறது. தானே மாநகராட்சி துணை கமிஷனர் மணீஷ் ஜோஷிஇது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “வகுப்பறையில் ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களுடைய டெஸ்க்கில் தனி லாக்கர் இருக்கும். புத்தகங்களை அதில் வைத்து விட்டுச் செல்லலாம்.எனவே அவர்கள் அன்றாடம் புத்தகங்களை பள்ளிக்கு சுமந்துவரத் தேவையில்லை” என்றார். தற்போது தானே மாநகராட்சிக்கு சொந்தமான 130 பிரைமரி மற்றும் 13 செகண்டரி பள்ளிகள் உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 7,000 மாணவர்கள் படிக்கிறார்கள். 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மாநகராட்சி கல்வி அதிகாரி ரகுநாத் பெல்டர் இத்திட்டம் குறித்து கூறுகையில், “முதல் கட்டமாக கீழ்வகுப்புகளில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். அதாவது இந்த ஆண்டில் முதலாவது மற்றும் இரண்டாவது வகுப்புகளில் இத்திட்டத்தை அமல் செய்கிறோம்.

இந்த முயற்சி எந்த அளவில் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்தும் தேவையான ஏற்பாடுகளை செய்த பிறகும் உயர் வகுப்புகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும் குழந்தைகள் ஸ்கூல் பேக் இல்லாமலேயே பள்ளிக்கு வரலாம்” என்றார். இதற்கிடையே பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதிலாக டிஜிட்டல் போர்டுகளை வைக்கவும் சீனியர் மாணவர்களுக்கு டேப்ளெட் பி.சி.க்கள் வழங்கவும் தானே மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக மேயர் சஞ்சய் மோரே தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி