அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு ஆசிரியர்கள் மட்டும் காரணமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2015

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு ஆசிரியர்கள் மட்டும் காரணமா?


அன்புள்ள கல்வி செய்தி வாசகர்களுக்கு வணக்கம்...

நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் தற்போது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்ததிலிருந்து அதை பற்றிய பதிவுகள் வந்து கொண்டு இருக்கின்றன.அதில் அரசு பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறித்தும் மாணவர்களின் தோல்வி குறித்து பதிவுகள் வருகின்றன.
ஏன் அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி அடைகிறார்கள் என்பதற்கு பல்வேறு காரணம் சொல்லப்படுகிறது. அதில் ஆசிரியர் பாடம் நடத்துவது இல்லை பள்ளிக்கு வருவதில்லை பருவ தேர்வுகள் வைப்பது இல்லை ஓபீ அடிக்கிறார்கள் என்று குறிப்பாக கலை பிரிவு இதில் சில காரணம் ஏற்புடையதாக இருந்தாலும் பல காரணங்கள் என்னை போன்ற ஆசிரியர்களுக்கு மனமுடைய செய்கிறது.ஏன் என்றால் தேர்ச்சி சத விகிதம் குறைய முக்கிய காரணமாக இருப்பது பல உள்ளது அதில்

1.முன்பு இருந்த மாதிரி மாணவர்கள் மனநிலை கீழ்படிதல் ஒழுக்கம் சார்ந்தவிசயங்கள் மோசமாக உள்ளன.

2.மாணவர்கள் தவறு செய்யும் போது கூட தண்டித்து நல்வழி படுத்த முடியாத சூழல் கடிந்து பேச கூடாது.

3.மாணவன் சொன்னதை செய்யவில்லை மற்றும் தவறு செய்யும் போதும் பார்த்து கொண்டுசும்மா இருக்க வேண்டும் அதை மீறி கேட்டால் ஆசிரியரை தகாத வார்த்தையால் திட்டுவது அடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதற்கு சட்டங்கள் சாதகமாகஇருப்பது.

4.கலை பிரிவில் சேரும் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் சரியாக பள்ளி வராத மற்றும் வாசிக்க தெரியாத கூட்டல் கழித்தல்தெரியாத மாணவர் இவர்களை 70 மார்க் எடுக்க வைக்க வேண்டும் மற்ற பிரிவில் அப்படிஅல்ல.

5.பள்ளிக்கு சரியாக வருதில்லை அதை கேட்கவும் முடியவில்லை அதுதான் கொடுமை.

6.மிகவும் பின்தங்கிய நிலையில் மாணவர்கள் இருப்பதால் அர்களின் பெற்றோர்கள்அவர்களை கவனிப்பது இல்லை பள்ளியலும் நல்வழி படுத்தமுடியவில்லை மீறி கேட்டால் சட்டம் ஆசிரியருக்கு எதிராக பாய்கிறது.

7.+1ல் பள்ளிக்கு வராதவன் கூட தேர்ச்சி

8.வகுப்பில் பெண் ஆசிரியர்கள் வயது முதிர்ந்த ஆசிரியர்களை கேலி செய்வது பாடம் எடுக்கவிடாமல் செய்வது இப்படி இருக்கும் சூழலில் தோல்விக்கு ஆசிரியர் மட்டும் பொறுப்பு என்று கூறுவதுஎந்த விதத்தில் சரி..

தனியார் பள்ளிகளில்...

1.தனியார் பள்ளிகளில் நல்ல தேர்ச்சி விகிதம் அளிக்கின்றனர் எப்படி அரசு பள்ளிசூழலா அங்கு நிலவுகிறது அங்கு இன்றும் மாணவர்கள் தவறு செய்தால் சிறு தண்டனைகள் கொடுத்து நல்வழிபடுத்துகிறார்கள்

2.சேர்க்கும் போதே பல்வேறு வகையானவிதிமுறைகளோடு சேர்க்கப்படுகின்றனர்.

3.படிக்கும் மாணவர்கள் மட்டும்தான் சேர்க்கப்படுகின்றனர்.

4.பெயில் ஆகும் மாணவர் என தெரிந்தால் பள்ளியை விட்டு நீக்கம்.

5.தவறு செய்யும் மாணவர்கள் தண்டிக்கப்படுகிறனர்இதனால் தேர்ச்சி அதிகரிக்கின்றது அப்படியா அரசு பள்ளிகள் அச் சூழலாநிலவுகிறது .அரசு பள்ளியில்நான் தனியார் பள்ளி ஆசிரியரை குறை கூறவில்லை அதேபோல் எங்களையும் குறைத்து மதிப்பிடாதீர்கள் அரசு பள்ளி ஆசிரியரும் பாடத்தில் நல்ல திறன் பெற்றவர்கள்தான் அரசு பள்ளியில் இருக்கும் சூழல் பாடத்தை முழுமையாக எடுத்து செல்ல முடிவதில்லை.தனியார் பள்ளியில் அப்படி இல்லை...

ஆதலால் இப் பதிவை சரி என நினைத்தால் இனி வரும் காலங்களில் அரசுபள்ளி மாணவர்கள் முழு தேர்ச்சி பெற வேண்டுமானால் அரசும் அதிகாரிகளும் உண்மையான காரணங்களை ஆராய்ந்து ஏழை மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பதிவை கல்விச்செய்தியில் பதிவிடுகிறேன்.

நன்றி வணக்கம்

Article by
Mr.Tharan N

14 comments:

  1. Good morning Mr Tharan N.
    I too agree with u but not all the points. I am also working in a international school private school in other states where i am getting more than govt salary.
    But i have studied in a tamilnadu Govt schools, where teacher is used to be very kind and supportive but not all the teachers.
    But the mentality towards the children in the govt schools is totally different that is the reason why all the govt schools teachers get even though very few teachers are at fault. We need to treat this poor and needy children s we do to our own children. Please carry on the good work you do to this children dont worry about what the society says about the result , One day the change we can see .

    Wish you all the best

    ReplyDelete
  2. நான் அரசு உதவிபெறும் பள்ளியில் பணிசெய்கிறேன் பள்ளியில் முதல் மதிப்பெண் 1164 மற்றும் 100 % தேர்ச்சி பள்ளியில் 245 மதிப்பெண் பெற்றமாணவரையும் முதல் வகுப்பில் சேர்கிறோம் ஆனால் தனியார் பள்ளியில் 450 மதிப்பெண் பெற்றவர்களை சேர்கின்றனர் இதுவே தேர்ச்சி மாறுபாடுக்கு முக்கியகாரணம்

    ReplyDelete
  3. Mr.Tharan what you said is correct. One and Only way is the parents should understand and they have to cooperate with the staff and should teach their wards to obey the elders and teachers. Nowadays parents are not ready to talk with their children about their shaping of good character which will be useful throughout the valuable life. Existing education system that is all pass , make the children lazy in aptitude and in attitude. In many government schools teachers are kindly requesting the
    children to present. We need change in education system.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நன்றி...
      பின்தங்கிய மாணவர்களின் பெற்றோர் மாணவர்களை கவனிப்பது இல்லை அவர்கள் கூலி
      வேலைக்கு செல்பவர்கள் ...
      கல்வியில் மாற்றமுமம் சரியான காரணத்தை கண்டு அதை தீர்ப்பதால் மட்டுமே தீர்வு கிடைக்கும்

      Delete
  4. இந்த நிலை கண்டிப்பாக மாறவேண்டும் அப்போதுதான் ஏழை எளிய அடிதட்டு மக்களின் நிலை மறும்...
    நம்பிக்கையுடன்

    ReplyDelete
  5. Naan solla ninaikkura anaithaium neenga sollittinga sir.100%correct reason

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி