அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் மோசடி: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2015

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் மோசடி: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்


எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர விரும்பும், பிளஸ் 2 மாணவர்களுக்காக நடத்தப்படும், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மருத்துவப் படிப்பில், நாடு தழுவிய அளவிலான ஒதுக்கீட்டில், சேர விரும்பும் மாணவர்களுக்காக, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த, இந்த மருத்துவ நுழைவுத் தேர்வில், அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தேர்வறையில், மர்ம கும்பல் விடைகளை அம்பலப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதேபோல் பீகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலும், முறைகேடு நடந்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 15 முதல் 20 லட்சம் ரூபாய்பணம் பெற்றுக் கொண்டு, 90 தேர்வர்களுக்கு, விடைகளை அம்பலப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால், நேர்மையாக தேர்வு எழுதிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, ஏற்கனவே நடத்திய நுழைவுத் தேர்வை ரத்து செய்து, மீண்டும் மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி, தன்வி சர்வால் என்பவர், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மூலம், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி மற்றும் யு.யு.லலித் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:அகில இந்திய அளவில் நடத்தப்பட்டமருத்துவ நுழைவுத் தேர்வில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மோசடியில் ஈடுபடும் ஒரு சிலரால், நேர்மையாக தேர்வெழுதும் மாணவர்களின் எதிர்காலம்பாதிக்கப்படக்கூடாது.எனவே, இந்த விவகாரத்தில், தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். மறுதேர்வு நடத்துவது குறித்து, மத்திய அரசு விரைவில் தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி