TNPSC மூலம் தேர்வை எதிர்த்து மனு: இறுதி முடிவுக்கு கட்டுப்பட ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2015

TNPSC மூலம் தேர்வை எதிர்த்து மனு: இறுதி முடிவுக்கு கட்டுப்பட ஐகோர்ட் உத்தரவு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மூலம்,உதவி மருத்துவ அதிகாரிகளை தேர்வு செய்ய, தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'உதவி மருத்துவ அதிகாரிகள் தேர்வு, வழக்கின் இறுதி முடிவை பொறுத்து அமையும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஆயுர்வேத மருத்துவர் உமா மகேஸ்வரி என்பவர், தாக்கல் செய்த மனு: மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அரசு பணிகளில், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நியமனம் செய்யப்பட்டு வந்தது. இந்த நியமன முறையில் காலதாமதம் ஏற்பட்டதால், 2012ல், 'மருத்துவ பணிகள் தேர்வு வாரியம்' என்ற அமைப்பை, மாநில சுகாதார துறை ஏற்படுத்தியது. அரசின் கூடுதல் செயலர் தலைவராகவும், இணைஇயக்குனர் உறுப்பினர் செயலராகவும் உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம், மருத்துவ துறையில் காலி பணியிடங்களுக்கான தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. டி.என்.பி.எஸ்.சி., பின்பற்றும் தேர்வு முறை, வித்தியாசமாக உள்ளது; பாடத்திட்டம் கடினமானது; தேர்வுக்கு சம்பந்தமில்லாமல் உள்ளது. சுகாதார துறையில் உள்ள காலியிடங்கள், மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் மூலம் தான், நிரப்பப்பட வேண்டும். மீண்டும், டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் தெரியவில்லை. தேர்வு வாரியம் அமைக்கப்பட்ட பின், உதவி மருத்துவ அதிகாரிகள் தேர்வை நடத்த, டி.என்.பி.எஸ்.சி.,க்கு அதிகாரம் இல்லை.

எனவே, உதவி மருத்துவ அதிகாரிகள் தேர்வு தொடர்பான நடவடிக்கைகளுக்கு, தடை விதிக்க வேண்டும். மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம்மூலம், தேர்வு நடத்த உத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதி ரவிசந்திரபாபு விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் ஞானசேகர், சத்யராஜ் ஆஜராகினர். 'எந்த நியமனமும், இந்த மனு மீதான இறுதி உத்தரவை பொறுத்து அமையும்' என, நீதிபதி ரவிசந்திரபாபு உத்தரவிட்டார். ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி, சுகாதார துறைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி