1 GB '3G' டேட்டாவுக்கு இனி ரூ.295 செலவாகும்;விரைவில் கட்டணம் உயருகிறது: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2015

1 GB '3G' டேட்டாவுக்கு இனி ரூ.295 செலவாகும்;விரைவில் கட்டணம் உயருகிறது:

பிரபல தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஐடியா செல்லுலர் டெல்லியில் பிரீபெய்டு மொபைல் இண்டர்நெட் பேக்கின் விலையை அதிரடியாக 18 சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பது இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐடியா நிறுவனம்
சமீபத்தில் ரீசார்ஜ் பேக்குகளின் கட்டணங்களில் அதிகமாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக, 2G மற்றும் 3G மொபைல் இண்டர்நெட்பேக்குகளில் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. தற்போது டெல்லியில் மட்டும் உயர்த்தப்பட்டுள்ள இந்த விலை விரைவில் இந்தியா முழுவதும் 5 முக்கிய சர்க்கிள்களிலும் கொண்டு வரப்பட உள்ளது.இந்த விலை உயர்வுக்கு கருத்து தெரிவிக்க ஐடியா நிறுவனம் மறுத்துவிட்டது. எனினும், கஸ்டமர் கேரிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 3G டேட்டா கட்டணத்தை 18 சதவீதமும், 2G டேட்டா கட்டணத்தை 11 சதவீதமும் உயர்த்தியுள்ளது.
அதன்படி, இனி டெல்லியில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 1 GB 3G டேட்டா பேக் ரூ.295-ஆகவும், அதேபோல், 2G டேட்டா பேக் ரூ.195 -ஆகவும் இருக்கும்.அதேநேரத்தில், பல ரீசார்ஜ் பேக்குகளின் வேலிடிட்டியையும் வெகுவாக குறைத்திருக்கிறது ஐடியா நிறுவனம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி