இப்பிரிவில் 61 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில் திருச்சி ஈ.வெ.ரா., கல்லுாரியில் 9 பணியிடங்கள், கும்பகோணம் அரசு மகளிர் கல்லுாரி, திருச்சி அரசு கல்லுாரியில் தலா 8, திண்டுக்கல் எம்.வி.எம்.,அரசு மகளிர் கல்லுாரி, நாமக்கல் அரசு கல்லுாரியில் தலா 6.தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லுாரியில் 5, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரியில் 3, நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரி, சென்னை ராணிமேரி கல்லுாரி, கோவை அரசு கல்லுாரியில் தலா 4, சேலம் அரசு கல்லுாரியில் 2, சென்னை மாநில கல்லுாரி, கரூர் அரசு கல்லுாரியில் தலா ஒரு பணியிடம் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நீண்டகாலமாக நிரப்பாததால் நெட்,' 'ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோர், முனைவர் பட்டம் பெற்றோர் பாதிக்கப்பட்டனர்.பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012 ல் புவியியல் பாடத்தில் 4 பணியிடங்கள் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது. பலகாரணங்களால் இதுவரை நிரப்பப்படவில்லை. தற்போது காலியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் ரூ.10 ஆயிரம் மாதஊதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கின்றனர்.
இதனால் எங்களுக்கு பணிவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை செயலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம், என்றார்.
Asst. Professor appointment eppo?
ReplyDeleteAdw appionment eppo?
ReplyDeleteWhat about asst prof appointment we r waiting more than 2 years
ReplyDelete