அரசு பெண் ஊழியர்களுக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தாலும், இரண் டாவது மகப்பேறு விடுமுறை வழங்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியை ஒருவருக்கு இரண்டாவது மகப்பேறு விடுமுறைகாலத்துக்கு வழங்கப் பட்ட ஊதியத்தை திரும்பப் பெறக்கோரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடையும் விதித்தது.ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியை பிரியதர் ஷினி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
அரசு பெண் ஊழியர்களுக்கு இரு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசு 1993-ல் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நான் 2011-ல் முதல் பிரசவத்துக்கு 180 நாள் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை எடுத்தேன்.
அப்போது எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.இந்நிலையில் 2014-ல் இரண்டாவது பிரசவத்துக்கு 179 நாள் மகப்பேறுவிடுமுறை எடுத்தேன். விடுமுறை முடித்து பணியில் சேர்ந்தபோது, நிபந்தனையுடன் பணியில் சேர அனுமதித்தனர்.பின்னர், எனக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் இருப்பதாலும், அதை மறைத்து இரண்டாவது பிரசவத்துக்கு விடுமுறை பெற் றதாகவும், அந்த விடுமுறையை ஊதியம் இல்லாத விடுமுறையாக மாற்றி, விடுமுறை காலத்துக்குப் பெற்ற ஊதியமான ரூ.2,56,112-யை திரும்ப வசூல் செய்யுமாறும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் 9.4.2015 அன்று உத்தரவிட்டார்.ஏற்கெனவே ஒரு வழக்கில், பெண் அரசு ஊழியர்களுக்கு முதல் பிரசவத்தில் எத்தனைகுழந்தைகள் பிறந்திருந்தாலும், இரண்டாவது பிரசவத்துக்கும் மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரண்டாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுமுறை எடுக்க எனக்கு உரிமை உள்ளது. எனவே, எனது சம்பளத்தில் பிடித்தம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:மனுதாரருக்கு முதல் பிரசவத் தில் இரட்டை குழந்தைகள் உள்ளன. இதனால், அவருக்கு இரண்டாவது பிரசவத்துக்கு வழங்கப்பட்ட மகப்பேறு விடுமுறைக்கான ஊதியத்தை பிடித்தம் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், மகப்பேறுவிடுமுறை இரு குழந்தைகளுக்கா, இரு பிரசவத்துக்கா என்கிற கேள்வி உள்ளது. மனுதாரருக்கு முதல் பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறந்ததை வைத்து, இரண்டாவது பிரசவத்துக்காக விடுமுறை தர மறுக்க முடியாது.பெண் ஊழியர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்புக்காக வழங்கப் படும் விடுமுறை இது.
எனவே, முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்திருந்தாலும், இரண்டாவது பிரசவத்துக்கும் மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும்.எனவே, இரண்டாவது பிரசவத்துக்காக வழங்கப்பட்ட மகப்பேறு விடுமுறைக்கு சம்பளத்தை பிடித்தம் செய்யும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறதுஎன நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். அடுத்த விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி