கழிவறையைக் கழுவிய மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: தமிழக அரசுக்கு நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2015

கழிவறையைக் கழுவிய மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

திருநெல்வேலியில், பள்ளி மாணவிகள் இரண்டு பேரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், இரண்டு மாணவிகளுக்கும் ஏன் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கூடாது என்று கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையத் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.மேலும்,
இந்த சம்பவத்தில், மாணவிகளை பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளிதலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணையில், பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில்ஈடுபட்டு வந்த பெண் அன்றைய தினம் பணிக்கு வராததால், அதே பள்ளியில் படிக்கும், அவரது மகளை, கழிவறையை சுத்தம் செய்யுமாறு தலைமை ஆசிரியர் கூறியுள்ளது தெரிய வந்துள்ளது.மேலும், பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் நபருக்கு வாரத்துக்கு ரூ.20 ஊதியமாகவழங்குவது குறித்து குறிப்பிட்ட மனித உரிமைகள் ஆணையம், இதுபோன்ற வேலைகளை செய்யும் நபர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வகை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி