தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம் என, மெட்ரிக்., பள்ளிகள்இயக்குனரகம் தெளிவுப்படுத்தியுள்ளது.ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் பெறும் பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களில் சேர்க்க கட்டாய கல்வி சட்டம் 2009ன்படி 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளது.
இதற்கான கல்விகட்டணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கு செலுத்துகிறது.ஒவ்வொரு சுயநிதி பள்ளியிலும் நுழைவு வகுப்புகளில் சேர்க்கலாம் என்ற உத்தரவின்படி கடந்த காலங்களில் கே.ஜி.,முதல், 6 ,9,11ம் வகுப்புகளிலும் மாணவர்களை சேர்த்தனர். 'நுழைவு வகுப்பு' என்பதை தவறாக புரிந்து கொண்ட சில பள்ளிகள் 6, 9, 11ம் வகுப்புகளிலும் மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கியது. இவர்களுக்கான கட்டண நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் நேர்ந்தது.இது குறித்து சமீபத்தில் வெளியான மற்றொரு உத்தரவில், “தனியார் சுய நிதி பள்ளிகளில் நுழைவு வகுப்பு என்பது கே.ஜி.,முதல் ஒன்றாம் வகுப்பு வரை என்பதை குறிக்கும். இதன்படி,அட்மிஷன் வழங்கும் பள்ளிகளுக்கு மட்டுமே கல்விக்கட்டணம் வழங்கப்படும்” என, அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்புக்கு மட்டுமே அட்மிஷன் வழங்க வேண்டும்.அதிகாரி ஒருவர் கூறுகையில், “ 25 சதவீத ஒதுக்கீட்டில் நுழைவு வகுப்பு என, குறிப்பிட்டது கே.ஜி., முதல் வகுப்பை மட்டுமே. கடந்த சில ஆண்டில் தவறாக அட்மிஷன் வழங்கியதால் இதனை மாற்றியமைக்கும் விதமாக புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல் 25 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை சரியான முறையில் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி