‘பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்’ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2015

‘பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்’

‘மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வுக்கு தட்கல் திட்டத்தில்விண்ணப்பிக்கலாம்’ என, அரசுத்தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்திக்குறிப்பு:
இந்த ஆண்டு ஜூன், ஜூலை 2015 மேல்நிலைச் சிறப்புத் துணைத் தேர்வெழுத தற்போதுவிண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மார்ச் 2015 மேல்நிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித் தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும். மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
தட்கலில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் சென்னையில் மட்டும் தேர்வெழுத இயலும். சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்று (5ம் தேதி) தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.மார்ச் 2015ல் மேல்நிலைத் தேர்வெழுதிப் பெற்ற தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலினை விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.
ஒரு பாடத்திற்கு 50 ரூபாய் மற்றும் இதர கட்டணமாக 35 ரூபாயும் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ஆயிரம் ரூபாய் மற்றும் பதிவு கட்டணம் 50 ரூபாய் சேர்த்து முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு பணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி