கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வேளாண்மை பிரிவில் படித்த மாணவி பெ.மீனா, நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்தார்.இதையடுத்து,
குளித்தலை அருகேயுள்ள தனியார் பாலிடெக் னிக்கில் சேர விண்ணப்பித்துள் ளார். சேர்க்கையின்போது, மாணவியின் 10-ம் வகுப்பு மதிப் பெண் பட்டியல் திருத்தப்பட்டுள் ளதை அறிந்த கல்லூரி நிர்வாகம், மாணவியின் சேர்க்கையை நிறுத்திவைத்தது. மேலும், இது குறித்து பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் தகவல் தெரிவித்துள்ளது.
இப்பள்ளியில் 2013-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய இந்த மாணவி ஆங்கிலப் பாடத்தில் 22 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். ஆனால், மதிப்பெண் பட்டியலில் ஆங்கில பாட மதிப்பெண்ணை 42 என திருத்தி அதே பள்ளியிலே 2013-ல் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ளார்.இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதிய பெ.மீனா, ஆங்கில பாடத் தில் தோல்வி அடைந்ததை அடுத்து, தனியார் பாலிடெக்னிக் கில் சேர விண்ணப்பித்தபோது, 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை திருத்தியது தெரிய வந்துள்ளது.
தான் 10-ம் வகுப்பு படித்து தோல்வியடைந்த பள்ளியிலேயே மதிப்பெண் பட்டியலை திருத்தி, 2 ஆண்டுகள் படித்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமிக்கு அஞ்சல் மூலம் நேற்று முன்தினம் புகார் அனுப்பியுள்ளார்.முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமியிடம் கேட்டபோது, “விரைவில் இதுகுறித்து விசா ரணை நடத்தப்படும்” என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி