காஸ் மானியத்தில் இணைய ஜூன் 30 கடைசி: தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேர் 'வெயிட்டிங்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2015

காஸ் மானியத்தில் இணைய ஜூன் 30 கடைசி: தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேர் 'வெயிட்டிங்'

சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் சேர இந்த மாதம் 30ம் தேதி தான் கடைசி நாள். தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேர் இந்த திட்டத்தில் இணையவில்லை.
பெரம்பலுார் திருச்சி தர்மபுரி விருதுநகர் சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர் இணைந்துள்ளனர்.மத்திய அரசு கடந்த ஜன. மாதம் மாற்றி அமைக்கப்பட்ட சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் சந்தை விலையில் சமையல் காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். பின்அதற்கான மானிய தொகையை வங்கி கணக்கில் எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக வரவு வைக்கும்.நேரடி மானிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் முன் வைப்பு தொகையாக 568 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. பின் சிலிண்டர் வாங்கும்போது மானிய தொகை மூன்று நாட்களில் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.கடந்த மார்ச் வரை வாடிக்கையாளர்களுக்கு மானிய விலையில் காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டது.கடந்த ஏப். முதல் மானிய திட்டத்தில் இணைந்த மற்றும் இணையாத அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சந்தை விலையில் சிலிண்டர் விற்கப்படுகிறது.திட்டத்தில் இணைந்தவர்களுக்கான மானிய தொகை வங்கியில் செலுத்தப்படுகிறது.
பதிவு செய்யாதவர்கள் சந்தை விலையில் சிலிண்டர் வாங்கி வருகின்றனர்.எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவின்படி நேரடி மானிய திட்டத்தில் இந்த மாதத்திற்குள் இணைந்து விட்டால் இதுவரை சந்தை விலையில் வாங்கிய சிலிண்டருக்கும் சேர்த்து நிறுத்தி வைக்கப்பட்ட மானியம் வழங்கப்படும்.ஆனால் ஜூலை முதல் மானிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர் எந்த மாதத்தில் இணைகிறாரோ அந்த மாதம் முதல் மானியம் வழங்கப்படும்.தமிழகத்தில் பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் பாரத் இந்துஸ்தான் நிறுவனங்களுக்கு 1.54 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.நேற்று 10ம் தேதி நிலவரப்படி நேரடி மானிய திட்டத்தில் 1.38 கோடி பேர் இணைந்துள்ளனர்; 16 லட்சம் வாடிக்கையாளர் இணையாமல் உள்ளனர்.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நேரடி மானிய திட்டத்தில் இணைய தமிழில் விண்ணப்பம் சிறப்பு முகாம்கள் என பல வசதிகள் செய்யப்பட்டும் சிலர் இணையாமல் உள்ளனர். அவர்கள் எப்போது மானிய திட்டத்தில் இணைகின்றனரோ அப்போது முதல் தான் மானியம் வழங்கப்படும்.மானிய திட்டத்தில் சேர வாடிக்கையாளர் தகுந்த ஆவணங்கள் வழங்கியும் அவர்களை அலைக்கழிக்கும் காஸ் ஏஜன்சிகள் மீது புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி