இன்ஜி., விண்ணப்பதாரர்களுக்கு 'ரேண்டம்' எண் வெளியீடு: 30விநாடிகளில் தயாரானது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2015

இன்ஜி., விண்ணப்பதாரர்களுக்கு 'ரேண்டம்' எண் வெளியீடு: 30விநாடிகளில் தயாரானது

அண்ணா பல்கலையில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பித்த, 1.54 லட்சம் மாணவர்களுக்கு, நேற்று, 30 வினாடிகளில், 'ரேண்டம்' எண் என, அழைக்கப்படும், சமவாய்ப்பு எண் வெளியிடப் பட்டது.

தானியங்கி முறையில்



அண்ணா பல்கலையில், நேற்று காலை 10:00 மணிக்கு, உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், பல்கலை துணைவேந்தர் ராஜாராம், பதிவாளர் கணேசன் முன்னிலையில், 'ரேண்டம்' எண் உருவாக்குதலை, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கைசெயலர் ரைமண்ட் உத்தரியராஜ் மேற்கொண்டார்.சிறப்பு, 'சாப்ட்வேர்' மூலம், 30 வினாடிகளில் அனைத்து விண்ணப்பங்களுக்கும் எண்கள் உருவாக்கப்பட்டன;எந்த விண்ணப்பத்துக்கு எந்த, 'ரேண்டம்' எண் என, தானியங்கி முறையில், பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து, ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது,''மாணவர்கள் தங்களின், 'ரேண்டம்' எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்; தேவைப்பட்டால், கவுன்சிலிங்கின் போது பயன்படுத்தப்படும்,'' என்றார்.யாருக்கு முன்னுரிமைஇரு மாணவர்கள் ஒரே, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றிருந்தால், அவர்களில் யாருக்கு முன்னுரிமை என்று முடிவு செய்ய, கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் நான்காம் பாடங்களின் மதிப்பெண் வரிசையாக ஒப்பிடப்படும். எந்த பாடத்திலாவது வித்தியாசம் இருந்தால், அதிக மதிப்பெண் பெற்றவர் முன்னுரிமை பெறுவார்.அதிலும் சமம் என்றால், பிறந்த தேதியில் மூத்தவருக்கு முன்னுரிமை கிடைக்கும். அதன்பின்னும் சமம் என்றால், 'ரேண்டம்' எண்ணில், அதிக எண் கொண்டவருக்கு முன்னுரிமை கிடைக்கும்.

46 ஆயிரம் இடங்கள் காலி

அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் மூலம் நிரப்ப, இதுவரை, 2 லட்சத்து, 658 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், 1.78 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீடு; 21,741 இடங்கள், கல்லூரிகளால் கூடுதலாக தரப்பட்டவை. இந்த எண்ணிக்கையின் படி பார்த்தால், 'ரேண்டம்' எண் வெளியிட்ட நேற்றே, 46 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அண்ணா பல்கலை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அனைவருக்கும் எளிதாக இடம் கிடைக்கும் என்றாலும், தேவையான பாடப்பிரிவு; தேவையான கல்லூரியில் இடம் கிடைப்பது தான் சிரமம். அதற்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அதிகம் இருக்க வேண்டும்' என்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி