அரசு மருத்துவக் கல்லூரிகளில் பழைய மாணவர்கள் 520 பேருக்கு வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2015

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பழைய மாணவர்கள் 520 பேருக்கு வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் கட் ஆஃப்பில் முன்னிலையில்வந்துள்ள பழைய மாணவர்கள் 520 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் 2,655 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 398 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 2,257 இடங்கள் மாநில அரசுக்கு இருக்கின்றன.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள்ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவை தவிர8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 833 எம்பிபிஎஸ்இடங்கள் மற்றும் 19 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 1,020 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், 2015 - 2016-ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்காக 31,525 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்தவர்களில் 26,846 மாணவர்கள் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். பழைய மாணவர்கள் 4,679 பேர் ஆகும். மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் பழைய மாணவர்கள் பெரும்பாலானோர் கட் ஆஃப் மதிப்பெண்களில் முன்னிலையில் உள்ளனர். இதனால் கவுன்சலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசுஒதுக்கீட்டு இடங்களில் பழைய மாணவர்களுக்கு இடம் கிடைக்க அதிக அளவு வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று விண்ணப்பித்த மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது.

17 வயது பூர்த்தியாகாததால் நிராகரிப்பு:

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவப் படிப்பில் சேருவதற்கு டிசம்பர் 31-ம் தேதியுடன் 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த 17 வயது பூர்த்தியாகாத மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அவர்களுக்கு 17 வயது பூர்த்தியாக சில நாட்கள், வாரம்மற்றும் மாதம் இருந்தது. ஆனாலும் 17 வயது பூர்த்தியாகாததால் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டோம். இதேபோல சாதி சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் இல்லாத மாணவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அந்த மாணவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு எம்பிபிஎஸ் கிடைக்காமல் பிடிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களும் தற்போது விண்ணப்பித்துள்ளனர். தற்போது வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் கட் ஆஃப் 196 வரை சுமார் 520 பழைய மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் அல்லது தனியார்மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் இடங்கள் கிடைக்க வாய்ப் புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி