6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2015

6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'

அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க, கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது,
சென்னை உள்ளிட்ட நகரங்களில், காலை, 9:00 மணிக்கு வகுப்புகள் துவங்கி, மாலை, 3:30 மணிக்கு முடிகிறது. கிராமங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில், 9:30 மணிக்கு பள்ளி துவங்கி, 4:00 மணிக்கு முடிகிறது.சிறப்பு வகுப்புகளை, காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்த, ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, காலையில் பள்ளி துவங்கும் முன், ஒரு மணி நேரம்;10 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மாலையில் வகுப்புகள் முடிந்த பின், ஒன்றரை மணி நேரம், சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.'இந்த திட்டத்தில், தினமும் எந்த பாடத்துக்கு சிறப்பு வகுப்பு என்பதை, ஆசிரியர்கள்
முன்கூட்டியே அட்டவணை தயாரித்து, தலைமை ஆசிரியருடன் ஆலோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்; ஆசிரியர் இல்லை என்ற காரணம் காட்டி, சிறப்பு வகுப்பை ரத்து செய்யக் கூடாது' என, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

7 comments:

  1. வரவேற்கத்தக்க முடிவு ஆசிரியர்களின் முயற்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றால் மகிழ்ச்சி

    ReplyDelete
  2. இத்திட்டம் எங்கள் பள்ளியில் ஜீன் முதல்வாரத்திலிருந்து நடைமுறையில் உள்ளது.

    ReplyDelete
  3. இனி அனைவரும் டரியலாகப் போகிறார்கள்....

    ReplyDelete
  4. 9 pm to 4 pm க்குளாள எவ்வளவோ நேரம் இருக்கே!!! இந்த டைம நல்லா பயன்படுத்தினாலே இன்னும் 2 பாடத்த கூட படிக்கவும்முடியும்
    நடத்தவும முடியும்.எதுக்கு தேவையில்லாத ஸ்பெஷல் க்ளாஸ் வேற..மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் மேல இன்னும அதிக வெறுப்பதான் உண்டுபண்ணும் இது.....

    ReplyDelete
  5. correct sir.9.30 to 4.15 varai teacher-student thanathu kadamaiai muraiyaka panninal entha vakuppum thevaiyilai.ilvasa porutkal pass panniya manavanku, kuripita % marks yedutha manavarkaluku vazhanginal manavanum aarvaththudan padipan.oru aasiriyarai vaithu kondu botany, zoology, biology result tharavendum yena katayapaduthuvathodu (manaulachalai yerpaduthum vagaiyil) matumanti 17(b) vazhangiyum sathanai paddika ninaipathodu pazhi vankukintanar,Botany .zoology. .biology X1..X11 42 padavelai vazhaguvathodu special ciass vaa yena kuruvathu torture

    ReplyDelete
  6. June first week onwards special class should be taken most of the govt. School teacher s

    ReplyDelete
  7. June first week onwards special class should be taken most of the govt. School teacher s

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி