74 பணியிடங்களுக்கான குரூப்-1 புதிய தேர்வு அறிவிக்கை ஜூன் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய பிரிவுகளில் 83 துணை மருத்துவர் காலி பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.
இந்தத் தேர்வை 3 ஆயிரத்து 695 பேர் எழுதினர். சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 நகரங்களில் 15 இடங்களில் இத்தேர்வு நடைபெற்றது. சென்னையில் ஆயிரத்து 798 பேர் இதனை எழுதினர்.
எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை டிஎன்பிஎஸ்சி பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் ஷோபனா பார்வையிட்டனர். அப்போது பாலசுப்ரமணியன் கூறியதாவது:19 மாவட்ட துணை ஆட்சியர் பணியிடங்கள், 26 டிஎஸ்பி பணியிடங்கள், 21 உதவி ஆணையர் (வணிகம்) பணியிடங்கள் மற்றும் 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய 74 பணியிடங்களுக்கான குரூப் I தேர்வு அறிவிக்கை ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும்.ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குரூப் I மெயின் தேர்வு ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனை 4 ஆயிரத்து 389 பேர் எழுதுகின்றனர்.மே 29-ம் தேதி கடைசிநாள் வரை குரூப் II தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆயிரத்து 241 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. குரூப் IV சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 15-ம் தேதி தொடங்கும்.டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. நேர்முகத் தேர்வுகள் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி