B.Ed படிப்பு ஓராண்டா? அல்லது 2 ஆண்டுகளா?- அரசு தீவிர பரிசீலனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2015

B.Ed படிப்பு ஓராண்டா? அல்லது 2 ஆண்டுகளா?- அரசு தீவிர பரிசீலனை

இந்த ஆண்டுக்கான பிஎட் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், படிப்பு காலம் ஓராண்டா? அல்லது 2 ஆண்டுகளா? என்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.2015-16-ம் கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் பிஎட் படிப்பு காலம் ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) அறிவித்துள்ளது
.என்சிடிஇ-யின் அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு தனியார் கல்வியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் பிஎட் படிப்பு இந்த ஆண்டு ஏற்கெனவே இருந்து வருவதைப் போன்று ஓராண்டு காலமாக இருக்குமா? அல்லது என்சிடிஇ அறிவிப்பின்படி 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுமா? என்று பிஎட் படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே, 2 ஆண்டு படிப்பு காலத்துக்கான பாடத் திட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது.பிஎட் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்குவதற்கு முன்பாக அது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளுக்கு அரசின் ஒப்புதல் பெறப்படுவது வழக்கம். அந்த வகையில், 2015-16-ம் கல்வி ஆண்டு பிஎட் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அரசின் ஒப்புதல் பெறுவதற்காக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும், கல்லூரி கல்வி இயக்குநரகமும் கருத்துருவை உயர்கல்வித் துறைக்கு அனுப்பிவிட்டன.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர்பேராசிரியர் தேவதாஸிடம் கேட்டபோது, “மாணவர் சேர்க்கை நெறிமுறைகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. படிப்பு காலம் ஓராண்டா? அல்லது 2 ஆண்டுகளா? என்பதை அரசு முடிவு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அரசின் ஒப்புதல் கிடைத்த பின்னரே இது குறித்த முழு விவரமும் தெரியவரும்” என்றார்.

4 comments:

  1. தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள HARUR A.E.E.O , அலுவலகத்தில் பிப்ரவரி 2015 மாத ஊதிய
    பட்டியலுடன் சமர்பித்த வருமான வரி படிவத்துடன் எல்.ஐ.சி பில், டீயூசன் பீஸ்,ஆஸ்பெட்டல் பீஸ்,நன்கொடை பில்,வீட்டுகடன் பில் என, கட்டமாலே போலியாக‌ பில் வைத்திருந்த 86 ஆசிரியர்களுக்கு INCOME TAX SALEM OFFICE நோட்டீஸ் அனுப்பி உள்ளது.மேலும் 12 ஆசிரியர்கள் இலட்ச கணக்கில் போலி பில் வைத்திருந்ததது கன்டுபிடிக்கபட்டது.இப்படி வரி ஏய்ப்பு செய்தவர்களின் பெயர்கள் 04/06/2015 அன்று HARUR A.E.E.O,OFFICE IN தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.இவர்கள் தான் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பார்களா? சமுதாயமே சொல்லு.

    ReplyDelete
  2. Friends ellorum konjam yosinga.82to 89 edutha passnu sonanga.naam perisa athai eduthukalai.but selected list vitta pinnar avangalukum posting kodukaranganu therinthu naam porattam seithom.but no use.ipavum naam athe mathiri iruthom endral namaku velai kidaikathu.july 14 judgment varakiravaraikum naam amaithiya iruthom endral. Gov tet exam vaithu posting poduviduvaarkal

    ReplyDelete
  3. So naam irupathai gov kaatanum.illai avanga maranthuviduvaarkal

    ReplyDelete
  4. any one like to mutual transfer for sathiyamangalam from inbetween attur to kallakurichi english BT only contact 9629820626

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி