நேரில் வரத் தேவையில்லை: ஆன்லைனில் வழக்கு தொடரும் புதிய வசதி - சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2015

நேரில் வரத் தேவையில்லை: ஆன்லைனில் வழக்கு தொடரும் புதிய வசதி - சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் அறிமுகம்

ஆன்லைனிலேயே வழக்கு தொட ரும் வசதியை சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் அறிமுகப் படுத்த உள்ளது. இதன்மூலம் மனுதாரர்களின் நேரமும் பணமும் வெகுவாக மிச்சமாகும்.உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன் றங்கள், கீழமை நீதிமன்றங்களை கணினிமயமாக்கும் திட்டங்கள் படிப்படியாக நடந்துவருகின்றன.
ஒவ்வொரு நாளும்விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகள் பட்டியல், வழக்கின் தற்போதைய நிலை, தீர்ப்பு விவரம் போன்றவற்றை நீதிமன்ற இணையதளத்தில் பார்க்க முடிகிறது. வழக்கறிஞருக்கான வழக்குகள் பட்டியலை அவர் களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந்த வரிசையில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர ஆன்லைனில் மனு தாக்கல் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உயர் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன்படி, ஆன் லைனில் மனு தாக்கல் செய் வதற்கேற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் தேசிய தகவல் மையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

புகார்களும் ஆன்லைனில்..

இதர புகார்களை ஆன்லைனில் தெரிவிக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது. இதுபற்றி உயர் நீதிமன்ற நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மீது புகார்கள் கூற விரும்பினால், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் மட்டுமே அனுப்ப முடியும். இத்தகைய புகார்கள் மீதான நட வடிக்கை குறித்த விவரம், புகார் தாரரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் ஆக அனுப்பப்படுகிறது. புகார் குறித்து உடனுக்குடன்விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக் கப்படுவதுடன், தேவைப்பட்டால் அதுகுறித்துதபாலிலும் பதில் அனுப்பப்படுகிறது. இந்த சேவையை மேம்படுத்த ஆன் லைனில் புகார் அளிக்கும் புதிய வச தியை ஏற்படுத்தித் தரவும் உயர் நீதி மன்றம் திட்டமிட்டுள்ளது’’ என்றனர்.

செல்போனில் விசாரணை விவரம்

மேலும், வழக்கு விசாரணை நிலவரத்தை வழக்கறிஞர்கள், வழக்காடிகள் தங்களது ஸ்மார்ட் போனிலேயே தெரிந்துகொள்ளும் வசதியும் தற்போது உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தின் ‘டவுன்லோடு’ பகுதியில் 3-வதாக உள்ள ஆண்ட் ராய்டு அப்ஸ் டிஸ்ப்போர்டு (Android Apps Dispboard) என்ற செயலியை ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்ய வேண்டும்.

எந்த நீதிமன்றத் தில், எத்தனையாவது வழக்கு விசா ரணை நடக்கிறது, தங்கள் வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்ற ‘டிஸ்பிளே போர்டை’ செல் போன் திரையிலேயே காணமுடியும்.ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்வது, புகார் அளிப்பது போன்ற வசதிகளும் அமலுக்கு வந்தால், நீதிமன்றம் தொடர்பான பல பணிகளை வீடு அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் மூலம் மேற்கொள்ள முடியும். இதற்காக பொதுமக்கள் சென்னைக்கு வரத் தேவையில்லை. வழக்காடிகளின் நேரமும் பணமும் வெகுவாக மிச்சமாகும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறது உயர் நீதிமன்ற நிர்வாகம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி