உங்கள் மகள்களுடன் செல்ஃபி: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு ட்விட்டரில் மகத்தான வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2015

உங்கள் மகள்களுடன் செல்ஃபி: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு ட்விட்டரில் மகத்தான வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வானொலியில் மூலம் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போது நாட்டில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது என்பதால், பெண் சிசுவைக் காப்பாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
பெற்றோர்களாகிய நீங்களும் உங்கள் மகள்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து
#SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் உடன் ட்விட்டரில் பகிருங்கள். அவற்றை நான் மகிழ்ச்சியுடன் ரீட்வீட் (பகிர்தல்) செய்வேன். மோடி விடுத்த 'மகளுடன் செல்ஃபி' அழைப்புக்கு ட்விட்டரில் மகத்தான வரவேற்பு கிடைத்தது.
#SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் இட்டு, பெற்றோர் பலரும் தங்கள் மகள்களுடனான புகைப்படங்களைப் பகிர்ந்தவண்ணம் உள்ளனர்.அவற்றில் பலவும் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனால், இந்தப் பிரச்சார உத்திக்கு ட்விட்டரில் படுவேகமாக வரவேற்பு கிடைத்தது.நிமிடத்துக்கு 20-க்கும் மேற்பட்ட போஸ்டுகள் பகிரப்பட்டதன் விளைவாக,
#SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் நீண்ட நேரம் நீடித்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி