பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்: கல்வித்துறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2015

பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்: கல்வித்துறை.

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு செல்போன்கொண்டு வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது.தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சேர்க்கை நடைபெறும் போது தனியார் பள்ளி நிர்வாகம் சேர்க்கைக்கான முன்பணம் அதிகமாக வசூலித்து வருவதாகவும், இதை சிலர் வீடியோ எடுத்து கல்வித்துறைக்கு அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதையடுத்து, அதிகமாக முன்பணம் மாணவர்களிடம் வசூலித்தால் கல்வி பெறும் உரிமைசட்டத்தின் கீழ் பள்ளி நிர்வாகம் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களிடம் செல்போன் தருவதை பெற்றோர்கள் அறவே தவிர்க்க வேண்டும். மீறி பள்ளி வாளகத்திற்குள் செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி