குவியும் கல்வி கட்டண புகார்:கண்டுகொள்ளாத அதிகாரிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2015

குவியும் கல்வி கட்டண புகார்:கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தனியார் பள்ளிகளில், புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனால், பல பள்ளிகளில் கட்டணப் பிரச்னை பூதாகரமாகிவருகிறது.ஆங்காங்கே, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் சாலைக்கு வந்தும், பள்ளி வளாகத்திற்குள்ளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய மெட்ரிக் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகம் வேடிக்கை பார்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தினமும் ஏராளமான பெற்றோர், கல்வித்துறை அலுவலகங்கள் உள்ள சென்னை, டி.பி.ஐ., வளாகத்திற்கு வந்து, பள்ளிகள் மீது புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
இதுவரை, சென்னை, அடையாறு பாலவித்யாமந்திர் பள்ளி உட்பட பல பள்ளிகளின் மீது, புகார் அளிக்கப்பட்டுள்ளது.அதிக கட்டணம் வசூலிக்கும்
பள்ளிகள் குறித்து புகார்கள் வந்தால், அதை உடனடியாகவிசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகளுக்கு கல்விக் கட்டண நிர்ணயக் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து,மெட்ரிக் அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தனியார் பள்ளிகள் மீது, அவ்வளவு எளிதாக நடவடிக்கை எடுத்து விட முடியாது. பள்ளி நடத்துவோரில் பலர், அரசியலில் செல்வாக்கு உள்ளவர்கள். அதனால், அரசு உத்தரவிட்டால்விசாரணை நடத்துவோம்' என்றனர்.

1 comment:

  1. Play Three Players Games Online, 3 Players Games for kids, Y8 3 Players Games, Pog 3 Players Games, Online 3 Players Games - all online three player games 3 Players Games

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி