ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு முடிவின் போது மதிப்பெண்களையும்வெளியிட ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மையம் சார்பில் கல்வித்துறைக்கு கோரிக்கையில், அரசு பள்ளிகளில்காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த மே.31ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. சுமார் எட்டரை இலட்ச் பேர் இத்தேர்வை எதிர்கொண்டனர்.
எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிடும்போது மாணவ,மாணவியர்களின் மதிப்பெண்களையும் சேர்த்து வெளியிட கல்வித்துறை பரிசீலனை செய்ய வேண்டும். தற்போது குரூப் தேர்வு முடிவுகளின் போது டிஎன்பிஎஸ்சி., தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சேர்த்து வெளியிட்டு வருகிறது. அதே முறையை கல்வித்துறை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
very good
ReplyDeleteIthelam nadakura kariyama boss
ReplyDeleteதேர்வு மதிப்பெண்ணை வெளியிடாமல் ஆய்வக உதவியாளர் தேர்வு ..
ReplyDeleteகீ ஆன்சர் தர மாட்டீர்கள் ...
மதிப்பெண் சொல்ல மாட்டீர்கள் ....
நேர்முக மதிப்பீடு வெளியாகாது ....
கடைசியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடுவீர்கள் . ..
இப்படியொரு தேர்வு நடத்த தேர்வு கட்டணம் என்ற பெயரில் வசூல். . .
வட்ட செ,சதுர செ,மா செ மூலமாக உங்கள் அடிவருடிகளை தேர்ந்தெடுக்காமல் எங்கள் மனதில் ஏன் ஆசையை விதைக்கிறீர்கள்????
இப்படி எங்களை பாடாய் படுத்துவதற்கு பதில் "விலையில்லா பூச்சி மருந்து" கொடுத்து கொன்று விட்டு , உங்களுக்கு ஜால்லரா போடும் அடிவருடிகளை வாழ வையுங்கள். .. .