அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) வாயிலாக,ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி, நடப்பாண்டு முதல், அனைத்து ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.எஸ்.எஸ்.ஏ., சார்பில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, வட்டார வள மையங்கள் வாயிலாக, பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் பாடங்களை எளிதில் புரிந்து, ஆர்வமுடன் படிக்கும் வகையில், கற்பிப்பது எப்படி என இப்பயிற்சியில் கற்றுத்தரப்படுகிறது.திட்டம் விரிவாக்கம்கடந்தாண்டு வரை இப்பயிற்சிகள், 40 சதவீத ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில்,
நடப்பாண்டு முதல், அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர் பயிற்றுனர் வட்டாரங்கள் கூறியதாவது: எஸ்.எஸ்.ஏ., வாயிலாக, கடந்தாண்டு வரை ஒவ்வொரு பள்ளியிலும், ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சக ஆசிரியர்களுக்கு, பயிற்சிகுறித்து விளக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. பயிற்சி பெற்ற பலர், பயிற்சியை சக ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளாததோடு, மாணவர்களிடமும் பெரியளவில் செயல்படுத்த இல்லை, என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், நடப்பாண்டு முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.'பயிற்சிக்கு பின்னரே உறுதியாக கூற முடியும்'கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க சி.இ.ஓ., மல்லிகா கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாநில அளவிலான இப்பயிற்சியில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓரிருவர் மட்டுமே பங்கேற்பது வழக்கம். வரும், ௯ம் தேதி துவங்கவுள்ள பயிற்சியில், முதன் முறையாக, 32 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்களும் பங்கேற்கின்றனர். பயிற்சிக்குப் பின்னரேஉறுதியாக கூறமுடியும்,'' என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி