இப்படியும் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! எம்.சேக்முஜிபுர்ரகுமான் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2015

இப்படியும் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! எம்.சேக்முஜிபுர்ரகுமான்

தாராபுரம் அருகே தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களுக்கு கல்வி போதிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தங்களது சொந்த செலவில் செய்து வருகின்றனர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நல்லிமடம் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அரசு உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளி கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது.இந்தாண்டு இப்பள்ளி மாணவி ஜி.தாரணி 482 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி எஸ்.பாரதிபிரியா 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி கே.சங்கமித்ரா 471 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் இப்பள்ளி தாராபுரம் வட்டார அளவில் இரண்டாமிடத்தையும், குண்டடம் ஒன்றிய அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு நெருங்கும் நேரத்தில் 3 மாதத்திற்கு அனைத்து மாணவ, மாணவியரும் பள்ளியிலேயே தங்க வைக்கப்பட்டு இரவு நேர படிப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் தங்கும் அனைவருக்கும் இரவு நேர உணவு, உள்ளூர் பிரமுகர்களின் சார்பில் இலவசமாக வழங்கஆசிரியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மாணவர்களை கண்காணிக்க தினம் ஒரு ஆசிரியர் வீதம் பணிக்கு நியமிக்கப்படுவர். இதேபோல், பேருந்து வசதியில்லாததால் இரவு வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சரிவர இயலாத நிலை ஏற்பட்டது. அப்போது தாராபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் பள்ளி உரிமையாளர் பாலகிருஷ்ணன் தனக்கு சொந்தமான வேனை பள்ளிக்கு இலவசமாக அளித்து மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்தார். வேனுக்கு ஆகும் டீசல் செலவை பள்ளி ஆசிரியர்கள் அனைவரும்இணைந்து பங்கிட்டு கொண்டனர். இந்நிலையில், இப்பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் தர்மர் என்பவர் பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோருக்கு இருசக்கர வாகனம் தனது சொந்த செலவில் பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.

தற்போது தேர்வு முடிவு வெளியான நிலையில் மாவட்ட அளவில் மாணவிகள் இடம் பெறாததால் தனது ஊதியத்தின் பாதி தொகையான ரூ. 15 ஆயிரத்தை முதலிடம் பெற்ற மாணவிக்குரூ. 10 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற மாணவிக்கு ரூ. 5 ஆயிரம் என பகிர்ந்துவழங்கியுள்ளார். இவரின் செயல்பாட்டை கண்ட இப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியை ஆர்.விஜயபாலலட்சுமி, ஆசிரியர் தர்மர் வழங்கிய பரிசுத் தொகை போல் தானும் மாணவிகளுக்கு வழங்கியுள்ளார்.இதுதவிர ஆசிரியர் தர்மர், இப்பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் கல்லூரிக் கட்டணத்தை செலுத்தி இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை படிக்க வைத்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் தர்மர் கூறியது:

மிகவும் வறுமையான சூழ்நிலையில் அரசுப் பள்ளியிலேயே படித்து இன்று ஆசிரியராக உள்ளேன். அதனால் அரசுப் பள்ளியில் சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவியருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். எனது இரு குழந்தைகளையும் அரசுப் பள்ளியிலேயே படிக்க வைத்துள்ளேன். அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன் வரவேண்டும் என்றார்.

8 comments:

  1. U Inspired me with ur service motto. Keep it up
    Tharma sir

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. No word to say, only tears from eyes.that's all. God may bless every teachers who share their hands.

    ReplyDelete
  4. Mam eppadi irukkangeenga .gr 4 la ethdhana mark .eppo prepar pannnittu irukkeengala. Lab assistant dervil edhana questions write.

    ReplyDelete
  5. Mutual transfer from tvm to Kanayakumari BT English contact 9842916107

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி