பணி பாதுகாப்புக் கோரி சிறப்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2015

பணி பாதுகாப்புக் கோரி சிறப்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் சிறப்பு ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளடக்கிய கல்வித் திட்ட சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில்,
மதுரை தலைமை அஞ்சல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மாநிலத் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். செயலர் பாண்டி முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு மற்றும் அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் மகப்பேறு விடுப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.இது குறித்து, சங்கச் செயலர் பாண்டி கூறியது: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 3 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் பணிபுரிகிறோம். தொண்டு நிறுவனங்கள் மூலம் பணியில் அமர்த்தப்பட்ட எங்களுக்கு, கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஜூன் மாதத்திலிருந்து சிறப்பு ஆசிரியர்களுக்கு கிராம கல்விக்குழு மூலம் ஊதியம் வழங்க அரசு பரிந்துரை செய்துள்ளது.
இதனால், எங்களுக்கு பணி பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் எந்தத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வேலை பார்க்கிறோம் எனத் தெரியவில்லை.எனவே, பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதற்கட்டமாககண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். வரும் ஜூன் 14 ஆம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் மாநில அளவில் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.இதில், சங்க ஆலோசகர் எஸ். பாலமுருகன், அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் எம். ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு ஆசிரியர்கள் சங்க மாவட்டப் பொறுப்பாளர்கள் 350-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி