'பஸ் பாஸ்' வழங்கும் முறை குறித்து நாளை போக்குவரத்து மற்றும்கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2015

'பஸ் பாஸ்' வழங்கும் முறை குறித்து நாளை போக்குவரத்து மற்றும்கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முறை குறித்து, நாளை நடைபெறவுள்ள போக்குவரத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுஎடுக்கப்படும் என,
அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழக அரசு, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறந்ததும், தலைமை ஆசிரியர்கள் பஸ் பாஸ் வாங்கிக் கொடுக்க, கல்வித்துறை அதிகாரிகள் கடந்த மாதமே உத்தரவிட்டனர்.இந்த ஆண்டு முதல், மாணவ, மாணவியர் விவரத்தை, அவர்களின் ரத்தப் பிரிவுடன், இ.எம்.ஐ.எஸ்., எனப்படும், கல்வி மேலாண் தகவல் மையம் மூலம், 'ஆன்- - லைனில்' பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில், இலவச பஸ் பாஸ் பெற்றுக் கொள்ளவும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், மாணவர் விவரங்களை கணினி யில் பதிவு செய்வதில், 'ஆன் - லைனில்' பிரச்னை ஏற்பட்டுள்ளது.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், திருநெல்வேலி உட்பட அனைத்து மாவட்டங்களிலும், முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில், 'ஆன் - லைனில்' பதிவு செய்வதில் பிரச்னை ஏற்பட்டதால், இந்தத் திட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.எனவே, கடந்த ஆண்டுகளில் இருந்த முறைப்படியே பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய மாணவர்களுக்கு, பழைய பஸ் பாஸ் அட்டையில் புதிய தேதியிட்டும், புதிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட கடிதம் வழங்கியும் பஸ் பாஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, நாளை போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன், கல்வித்துறை அதிகாரிகள்ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதில், பஸ் பாஸ் வழங்கு வதற்கான வழிமுறைகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி