கல்லூரி தேர்வில் குழுவாக அமர்ந்து காப்பியடித்த மாணவ மாணவிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2015

கல்லூரி தேர்வில் குழுவாக அமர்ந்து காப்பியடித்த மாணவ மாணவிகள்.

கல்லூரி தேர்வில் குழுவாக அமர்ந்துகாப்பியடித்த மாணவ மாணவிகள் சமஸ்திபுர்: பீகாரில், கல்லூரி தேர்வில், பங்கேற்ற மாணவர் மற்றும் மாணவிகள் புத்தகங்களை கொண்டு வந்து காப்பியிடித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

போலி சான்றிதழ் வழக்கில் டில்லி சட்ட அமைச்சர் தோமர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், பீகாரின் கல்வி நிலை உலகறிந்த நிலையில், தற்போது,
அங்கு கல்லூரி தேர்வில் குழுவாக அமர்ந்து காப்பியெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோமர், போலி சான்றிதழ் தொடர்பாக முங்கர் மாவட்டத்தில் வைத்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த இடத்திலிருந்து 200 கி.மீ., தூரரத்தில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி.எஸ்சி., படிப்புக்கானதேர்வு இன்று நடந்தது. 3000 பேர் பங்கேற்ற இந்த தேர்வு, 800 பேர் அமரக்கூடிய அறையில் நடந்தது. இந்த தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள், தேர்வு வளாக காரிடர், வாசல், ஜன்னல் மற்றும் தாங்கள் விரும்பிய இடத்தில் அமர்ந்து தேர்வு எழுதினர்.

தேர்வின் போது, புத்தகங்களில், விடைகள்இருந்த பக்கங்களை கிழித்தும், புத்தகத்தையை கொண்டு வந்து காப்பியடித்தனர். மொபைல் போன் உதவி மூலம் விடைகளை அறிந்து தேர்வு எழுதினர்.இவர்களை கண்காணிப்பாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு மாணவிகளுக்கு 3 பேர் காப்பியடிக்கவும் உதவி செய்தனர். தேர்வு கண்காணிப்பாளர் அனில் குமார்கூறுகையில், 800 பேர் அமரக்கூடிய அறையில், 3 ஆயிரம் பேர் பங்கேற்றதால், தரையில் அமர்வதை தடுக்க முடியவில்லை. ஆனால் காப்பியடித்தது பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் நிலையையை எங்களால் முடிந்தளவு கட்டுப்படுத்தினோம் என கூறினார்.பீகாரில் கடந்த மார்ச் மாதம், நடந்த பள்ளி தேர்வின் போது, மாணவர்கள் காப்பியடிக்க உதவி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து பல மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டதும், பல பெற்றோர் மற்றும் போலீசார் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி