மாணவரே இல்லாத பள்ளி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2015

மாணவரே இல்லாத பள்ளி

முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளத்தில் ஒரு மாணவர் கூட இல்லாத அரசு துவக்கப்பள்ளிக்கு, தினமும் 2 ஆசிரியைகள் மட்டும் பணிக்கு வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளத்தில்,
52 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட அரசு துவக்கப்பள்ளி இன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த ஊரைச் சேர்ந்த பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள ஆங்கில மோகத்தால், பலரும் தங்களது குழந்தைகளை நகர் புறங்களில் உள்ள மெட்ரிக்., பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.இதனால், இங்குள்ள அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. கடந்தாண்டு 5 மாணவர்கள் மட்டுமே படித்தனர். அவர்களில் 5 ம் வகுப்பு படித்த 2 மாணவர்கள்,இந்தாண்டு ஆறாம் வகுப்புக்குவேறு பள்ளிக்கு செல்வதால், மாணவர்கள் எண்ணிக்கை 3 ஆக குறைந்தது.அவர்களும் வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டதால், தற்போது மாணவர்களே இல்லாத இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியை ஜான்சி ராணி, ஆசிரியை வேலு நாச்சியார் ஆகிய இருவர் மட்டும் தினமும் வந்து செல்கின்றனர். இதனால், இப்பள்ளி மூடப்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து கடலாடி ஒன்றிய கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ரவிக்குமார்கூறுகையில், “குழந்தைகளை சேர்த்து, தொடர்ந்து பள்ளியை நடத்த வழி வகை செய்யும் வகையில், கிராமத்தில் உள்ள பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி