பார்வை குறைபாடு உள்ளோருக்கு அரசு பணிகளில் வயது வரம்பு சலுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2015

பார்வை குறைபாடு உள்ளோருக்கு அரசு பணிகளில் வயது வரம்பு சலுகை

மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படும், பார்வையின்மை, காதுகேளாமை, கை, கால் மூட்டு செயலின்மை, பெருமூளை பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, வயது வரம்பு, 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை, நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்:
மத்திய அரசு பணிகளுக்கு நேரடி நியமனம் செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டு உள்ளது. பொதுப் பிரிவை சேர்ந்த பார்வையின்மை, காதுகேளாமை, கை, கால் மூட்டு செயலின்மை, பெருமூளை பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கான வயது வரம்பு, 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது. பார்வைக் குறைபாடு போன்றவை, குறைந்தபட்சம், 40 சதவீத குறைபாடு உள்ளோருக்குஇச்சலுகை வழங்கப்படும். இக்குறைபாடுகள் உள்ளோர், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் இனத்தவராக இருந்தால், 15 ஆண்டுகளும், மிகவும் பிற்பட்ட வகுப்பினராக இருந்தால், 13 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்த்தப்படுகிறது.அதிகபட்சமாக, 56 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.இவ்வாறு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி