நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2015

நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம்!

டூவீலர் ஓட்டுபவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நாளை (ஜூலை1) முதல் அமலாகிறது.டூவீலர் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதால், சில நாட்களாகவே ஹெல்மெட் விற்பனை சூடுபிடித்தது.
மதுரை ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:சாதாரணமாக மாதத்திற்கு ஆயிரம் ஹெல்மெட் விற்பது வழக்கம். நீதிமன்ற உத்தரவுக்குபின் விற்பனை பத்து மடங்காக அதிகரித்துள்ளது. ஐ.எஸ்.ஐ., தரமுள்ள பல முன்னணிநிறுவனங்கள் தயாரித்த ஹெல்மெட்டுகளை வாங்கி விற்கிறோம். பல வித வடிவங்களில் கிடைக்கும் இவற்றை வாகன ஓட்டிகள் விரும்பி வாங்குகின்றனர்.

'வெயிட் லெஸ்', வியர்வையில் இருந்து பாதுகாப்பு, இரவிலும் 'பளீச்' என தெரியும் வகையில் முகப்புகண்ணாடி வடிவமைப்பு உள்ளிட்ட பல வசதிகள் அடங்கியுள்ளன.தரத்தை மட்டுமே வாகன ஓட்டிகள் பார்ப்பதால் இதுபோன்ற ஹெல்மெட்டிற்கு மவுசுஅதிகரித்துள்ளது. உடனடியாக விற்றுவிடுவதால், ஹெல்மெட்டிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுஉள்ளது. இதுபோன்று எப்போதும் விற்பனை சூடுபிடித்தது கிடையாது, என்றார். ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். மோட்டார் வாகன சட்டம் 1998 பிரிவு 206ன்படி, அசல் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்று மற்றும் டூவீலர் தொடர்புடைய அனைத்து அசல் ஆவணங்களும் போலீசாரால் உரிய ஒப்புகைக்கு பின் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். பின் ஐ.எஸ்.ஐ., தரமுடைய ஹெல்மெட் மற்றும் அதை வாங்கியதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ஆவணங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.மோட்டார் வாகன சட்டம் 1998 பிரிவு 206ன்படி, அசல் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்று மற்றும் டூவீலர் தொடர்புடைய அனைத்து அசல் ஆவணங்களும் போலீசாரால் உரிய ஒப்புகைக்கு பின் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்.

எது சரியான ஹெல்மெட்

ஹெல்மெட் அணிந்து லாக் செய்த பின், ஹெல் மெட்டை அசைத்து பார்க்க வேண்டும். ஹெல்மெட் நகரக்கூடாது. அதன் உள்சுற்றளவு தலையின் அளவுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். இறுக்கமாகவோ, லுாசாகவோ இருக்கக் கூடாது. ஹெல்மெட் அணிந்தபின், சிறிது நேரம் கழித்து நெற்றி பகுதியில் சிவப்பு தடிப்பு ஏற்படுகிறதா என பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த ஹெல்மெட் உங்களுக்கு சரியானது அல்ல. வேறு ஹெல்மெட் அணிவது நல்லது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி