கோவையில் தனியார் பள்ளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2015

கோவையில் தனியார் பள்ளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் ஜே.டி.சாக்ரடீஸ் தலைமை வகித்தார்.
அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில், தகுதியற்ற ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பாலான தனியார் பள்ளிகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்தாமல் உள்ளது கண்டனத்துக்குரியது.விளையாட்டு மைதானம், போதிய இடவசதி இல்லாமல் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி