ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா? :கண்காணிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2015

ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா? :கண்காணிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில், இலவசப் பொருட்கள் வழங்குதல், ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட ஆவணங்களை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும்' என, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:


* ஒவ்வொரு உதவி தொடக்கக் கல்வி அலுவலரும், ஜூன் முதல் ஏப்ரல் வரை, குறைந்தது, ஒரு மாதத்தில், 18 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.

* மாணவர், ஆசிரியர் வருகைப் பதிவேடு, இலவசத் திட்டங்களின் செயல்பாடு, பயனாளிகளின் விவரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என, பார்க்க வேண்டும்; அதன் நகலைப் பெற வேண்டும்.

* பள்ளியில், ஒரு வேலைநாள் முழுவதும் இருந்து, பள்ளியின் நடவடிக்கை, ஆசிரியரின் கற்பித்தல், மாணவரின் கற்றல், கட்டமைப்பு வசதி, தேர்ச்சி விகிதம்,குறைபாடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து, அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

* மாணவர்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்க வேண்டும்.

* கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் பராமரிப்பு நிலை, கணினி உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடுகள் குறித்து கண்டறிய வேண்டும்.

*ஆபத்தை ஏற்படுத்தும் திறந்தவெளிக் கிணறுகள், இடிந்த, இடியும் நிலைக் கட்டடங்கள், உயரழுத்த மின் கம்பங்கள் போன்றவற்றால் பிரச்னை இருந்தால், உடனடியாக அறிக்கைத் தாக்கல் செய்து, அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் உத்தரவிட்டு உள்ளார்.

7 comments:

  1. பொறுப்பை உணர்ந்தால் அதிகாரிகளே தைவையில்லை!

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாக சொன்னீரகள் ...

      Delete
    2. பொறுப்பு வர வேண்டும் என்பதற்கு தான் இந்த அதிகாரிகள் நியமனம்...

      Delete
    3. திரு...பார்த்..திருந்..திரு..ஒழி..முடி.

      Delete
  2. Today morning there was a news that sabeetha mam announced the change in school hours and was going to be implemented from 24 this month...actually that news was published on June 21 2013....please avoid this inconvenience ...kalviseithi has a reputed name among the viewers...(like the duplicate GO published reg DA 8%)

    ReplyDelete
  3. group 4 ku cut off enna pa .....2nd phase irukka...apdi iruntha epo kupduvanga...high court typist result eppo varum...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி