மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை வசூலிக்கக் கூடாது: தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2015

மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை வசூலிக்கக் கூடாது: தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு

மாணவர் சேர்க்கையின்போதும், மாற்றுச்சான்றிதழ் வழங்கும் போதும் கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு அவர் அனுப்பியுள்ள ஓர் உத்தரவில் கூறியிருப்பதாவது:பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும்பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் மாண வர் சேர்க்கை மற்றும் மாணவர் களுக்கு மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) வழங்கும்போது நன்கொடை வசூல் செய்வதாக அவ்வப்போது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.மாணவர் சேர்க்கையின்போது, அரசு நிர்ணயித்துள்ள தொகையை தவிர பிற நன்கொடை ஏதும் கட்டாயமாக வசூல் செய்யக் கூடாது. எனவே, கல்வித்துறை அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இத்தகைய கட்டாய நன்கொடை வசூல் செய்வதை தவிர்க்க அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
விழிப்புடன் செயல்பட வேண்டும்
இதுபோன்ற புகார்கள் வரப் பெறாமல் விழிப்புடன் செயல் படுமாறு கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி