'இலவச லேப் - டாப் இப்போதைக்கு கிடைக்காது' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2015

'இலவச லேப் - டாப் இப்போதைக்கு கிடைக்காது'

'தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் இலவச, 'லேப்- டாப்' வினியோகம் துவங்க, மேலும் சில மாதங்களாகும்' என, தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்,
பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் இலவச, 'லேப் - டாப்'களை, மாநில அரசு வழங்கி வருகிறது. கடந்த கல்வியாண்டில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், சில பள்ளிகளில் மட்டும், 'லேப் - டாப்' வழங்கப்பட்டது.

இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறையான, 'எல்காட்' வட்டாரங்கள் கூறியதாவது:'லேப் - டாப்' சப்ளை செய்வதற்கான நிறுவனத்தை, தேர்ந்தெடுத்துவிட்டாலும், அவர்களுடன் விலை குறைப்பு குறித்து பேசி வருகிறோம். மொத்தம், 10.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன; ஒரு, 'லேப் - டாப்'க்கு, 50 ரூபாயை குறைத்தாலும், அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.அதற்காக, அந்த தனியார் நிறுவனத்திடம், தொடர்ந்து பேசி வருகிறோம். எனினும், அந்த நிறுவனம், 'லேப் - டாப்' சப்ளை செய்ய, குறைந்தது இரு மாதங்களாகும். தனியார் நிறுவனத்தின் சப்ளை துவங்கியதும், தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும், 'லேப் - டாப்' வழங்கப்படும்; எனவே, மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி