சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2015

சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.கர்நாடக அரசுத் தரப்பில் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், உச்சநீதிமன்ற பதிவாளரிடம் இன்று காலை 10.30 மணியளவில் மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்தார்.
சுமார் 2 ஆயிரத்து 400 பக்கங்கள் கொண்ட இந்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுவித்தது தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சொத்துகளை கணக்கீடு செய்ததில், தவறு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவினை பரிசீலித்த உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம், மனுவினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

இதனையடுத்து, இந்த மனு, உச்சநீதிமன்ற விசாரணைக்காக நிலுவையில் உள்ள மனுக்களின் பட்டியலில் இணைக்கப்படும். பின்னர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து, மனுவினைஆராய்ந்து விசாரணை நீதிபதிகள் யார் யார் என்பதை முடிவு செய்வார்.இதனையடுத்து, விசாரணை அமர்வு, ஜெயலலிதா தரப்பினர் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடும். இதனையடுத்து, விசாரணை தொடங்கப்படும்.​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி