மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகபள்ளி மற்றும் கல்லுாரிகளில், யோகா தினம் கொண்டாடுவதா, வேண்டாமா என, தமிழக அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை. இதனால், யோகா தினம் கொண்டாடுவதா, வேண்டாமா என்று,
ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கிணங்க, ஜூன், 21ம் தேதியை உலக யோகா தினமாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. முதல், யோகா தினம் வரும், 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.யோகா தினம் கொண்டாட, மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான- யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஜூன், 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால், தமிழக பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் யோகாதினம் உண்டா, இல்லையா என்றுஆசிரியர்களும், தன்னார்வ நிறுவனங்களும் குழப்பத்தில் உள்ளனர்.யோகா தினம் கொண்டாட தனியார் தொண்டு அமைப்புகள் முன்வந்து, சில மாவட்ட கலெக்டர்களிடம் கடிதம் கொடுத்துள்ளன. இதுகுறித்து பரிசீலிக்க, கல்வி அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.ஆனால், கல்வித்துறை இயக்குனர் அலுவலகங்களிலிருந்து, அதிகாரப்பூர்வ உத்தரவு வரவில்லை என, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் சபிதாவிடம் கேட்டபோது, தமிழகஅரசுப் பள்ளிகளில் தினமும், யோகா பயிற்சி உள்ளது. தனியாக, யோகா தினக் கொண்டாட்டம் எதுவும் இதுவரை அறிவிக்கவில்லை, என்றார்.கல்லுாரி கல்வி இயக்குனர் தேவதாஸ் கூறும் போது, யு.ஜி.சி., கடிதம் வந்துள்ளது. அரசிடம் கேட்டு, வரும் திங்கட்கிழமை முடிவு செய்யப்படும், என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி