காரைக்குடி:அரசு அறிவியல் மற்றும் கலை கல்லுாரிகளில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்கள், இன்ஜி., நர்சிங் படிப்புக்கு செல்வதால், அந்த காலியிடங்களை மூன்றாம் கட்ட கவுன்சிலிங் மூலம் நிரப்ப அரசு கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன. இதை அறிந்த அரசியல் கட்சியினர் அந்த இடங்களுக்கு சிபாரிசு கடிதம் அனுப்பி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லுாரிகளுக்கான கவுன்சிலிங், கடந்த மே மாதத்துடன் நிறைவடைந்தது.
வரும் ஜூன் 18-ம் தேதி கல்லுாரிகள் தொடங்க உள்ளன. கடந்த ஆண்டுகளில், இன்ஜி., நர்சிங், ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட படிப்புகளுக்கு 'கவுன்சிலிங்' நடக்கும்போதோ அல்லது நடந்து முடிந்த பிறகோ 'கவுன்சிலிங்' நடந்தது.இருக்கின்ற காலியிடங்களுக்கு ஏற்ப, அடுத்த கட்ட கவுன்சிலிங்கும் உடனே நடந்து முடிந்தது. இதனால், அரசியல் கட்சியினரின் சிபாரிசை கண்டு கொள்ளாமல், கல்லுாரிகள் கவுன்சிலிங்கை நடத்தி முடித்தன.இந்த ஆண்டு, எல்லாவற்றுக்கும் முதலாக கலை, அறிவியல் கல்லுாரி கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பலர், கவுன்சிலிங்கில் பங்கேற்று விரும்பிய துறையை தேர்வு செய்தனர். தொடர்ந்து கட்டணமும் செலுத்தினர்.மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், அரசு கல்லுாரிகளில் சேர்ந்த ஒரு சில மாணவர்கள், இன்ஜி., மற்றும் நர்சிங் படிப்பில் சேர ஆர்வம் காட்டி, தங்களுடைய சான்றிதழை கல்லுாரிகளிலிருந்து திரும்ப பெற்று வருகின்றனர்.
இதனால், ஏற்படும் காலியிடங்களுக்கு மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடத்த கல்லுாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.இதை அறிந்த அரசியல் பிரமுகர்கள், அந்த இடங்களை தங்கள் ஆதரவாளர்களுக்கு வாங்கி கொடுக்கும் வகையில் சிபாரிசு கடிதம் அனுப்பி வருகின்றனர். முதற்கட்ட கவுன்சிலிங்கை 'மெரிட்' அடிப்படையில் நடத்திய, கலை கல்லுாரிகள், மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கை நடத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்த காலியிடங்களையும் 'மெரிட்' அடிப்படையில் கவுன்சிலிங்கில் நிரப்ப வேண்டும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி